ஒன்லைன் சேவைகள்
விபரங்களைப் பார்க்கவும்
 
 

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வாடிக்கையாளர் செயலி (SLIC Customer App)

பின்வருவனவற்றை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்:

• காப்புறுதிப் பத்திரம் தொடர்பான தகவல்கள்

• புதுப்பித்தல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல் (அட்டை, friMi மற்றும் mCash)

• உங்களுடைய ஈட்டுத்தொகை கோரிக்கை தொடர்பான விபரங்கள்

• விபத்தொன்றை அறிக்கையிடுதல்

 

இதிலிருந்து அல்லது வேறிடத்திலிருந்து செயலியை (App) தரவிறக்கம் செய்து நிறுவுவது அவசியமாகும்.

or

அதன் பின்னர் செயலியுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லது ஒரு புதிய கணக்கை உருவாக்குங்கள் (நீங்கள் வாடிக்கையாளர் இணையக் கணக்கை (Customer Portal) வைத்திருந்தால் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்)

 

• தற்பொழுது வாடிக்கையாளர்கள் எமது இணைய தளத்தைப்

பயன்படுத்துவதன் மூலம் மோட்டார் வாகன காப்புறுதிப் பத்திரத்திற்கான தவணைக் கட்டணங்களைச் செலுத்த முடியும். https://www.srilankainsurance.net மற்றும் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் செயலி (SLIC App) மோட்டார் வாகன காப்புறுதிப் பத்திர விபரங்களின் ‘Pay Now’ பொத்தானை அழுத்தும் போது, அது உங்களை அந்த தளத்திற்கு அனுப்பி வைக்கும்.

 

• ஆயுள் காப்புறுதி கட்டணங்களைச் செலுத்துவதற்கு நீங்கள் FriMi / mCash என்பவற்றில் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ள முடியும்; அல்லது வாடிக்கையாளர் இணையதளத்தை தெரிவு செய்யலாம்.

• Demand Page இலிருந்து நீங்கள் செலுத்த வேண்டிய கோரிக்கையை (Demand) தெரிவு செய்து கொள்ள முடியும். மேலும் toggle பொத்தானை அழுத்துவதன் மூலம் ஏதேனும் மேலதிக தொகைகள் இருப்பின் அவற்றையும் சேர்த்துக் கொள்ள முடியும்.

• அதன் பின்னர் தெரிவுகளை (Options) தெரிவு செய்து கொள்வதற்கு செல்லவும்.

 

நீங்கள் பின்வருவனவற்றைத் தெரிவு செய்தால்

• முதலில், friMi அடையாள இலக்கத்தை அல்லது உங்கள் மொபைல்

தொலைபேசி இலக்கத்தை (ஏற்கனவே நீங்கள் அவற்றை உள்ளடக்கியிராவிட்டால்) சேருங்கள். அவ்வாறில்லாவிட்டால் popup இலிருந்து உங்களுக்கு விருப்பமான விடயத்தைத் தெரிவு செய்து தவணைக் கட்டணத்தைச் செலுத்துங்கள். அதனையடுத்து, கொடுக்கல் வாங்கல் நிராகரிப்பு அல்லது ஏற்பு தொடர்பாக உங்களுடைய friMi செயலிக்கு உங்களுக்கு ஓர் அறிவித்தல் கிடைக்கும்.

 

 

• எதிர்வினை SLIC செயலியில் பின்வரும் விதத்தில் காட்சிப்படுத்தப்படும்.

நிராகரிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்

ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுக்கல் வாங்கல்

 

நீங்கள் பின்வருவனவற்றைத் தெரிவு செய்தால்

• நீங்கள் ஏற்கனவே உள்ளடக்கியிராவிட்டால், முதலாவதாக mCash மொபிடெல் இலக்கத்தை சேருங்கள். இல்லாவிட்டால் popup இலிருந்து உங்களுக்கு விருப்பமான இலக்கத்தைத் தெரிவு செய்து, தவணைக் கட்டணத்தைச் செலுத்துங்கள்.

• எதிர்வினை SLIC செயலியில் பின்வரும் விதத்தில் காட்சிப்படுத்தப்படும்.

கொடுப்பனவு நிறைவேறவில்லை. (FAILED PAYMENT)


கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. (SUCCESSFUL PAYMENT)

விபரங்களைப் பார்க்கவும்
 
 

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வாடிக்கையாளர் தளம்

நீங்கள் பின்வருவனவற்றை மேற்கொள்ள முடியும்:

• உங்கள் சொந்த காப்புறுதிப் பத்திரங்களை முகாமைத்துவம் செய்தல்

• புதுப்பித்தல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்

• பிரயாண காப்புறுதி திட்டங்கள் மற்றும் வருடாந்த மருத்துவ காப்புறுதி திட்டங்கள் என்பவற்றை ஒன்லைனில் கொள்வனவு செய்தல்

 

முதலில், வாடிக்கையாளர் எமது https://www.srilankainsurance.net வாடிக்கையாளர் தளத்துக்கு சென்று தனது கணக்குடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் ஒரு கணக்கை வைத்திருக்காவிட்டால் தயவு செய்து ஒரு புதிய கணக்கை ஆரம்பிப்பதற்கு “Register for Service” பொத்தானை அழுத்தவும்.

 

வாடிக்கையாளர் தளத்துக்கூடாக கிரெடிட்/ டெபிட் அட்டை கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்.

 

ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள்

இணைப்பை ஏற்படுத்திய பின்னர் தயவுசெய்து Life பொத்தானை அழுத்தி, Manage My Policies பிரிவுக்குச் செல்லவும்.

 

 

அடுத்து வரும் திரையில், நீங்கள் ஏற்கனவே உங்கள் காப்புறுதிப் பத்திரத்தின் இலக்கத்தை சேர்த்திருக்காவிட்டால் தரப்பட்டிருக்கும் பெட்டியில் உங்கள் பத்திரத்தின் இலக்கத்தை தட்டச்சு செய்து, தயவுசெய்து அதனை சேர்க்கவும். அதன் பின்னர் Add Policy பொத்தானை அழுத்தவும். அதனையடுத்து கீழேயுள்ள அட்டவணையிலிருந்து நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டிய சம்பந்தப்பட்ட பத்திரத்துக்குக் பணம் செலுத்தும் பொருட்டு Pay என்ற பொத்தானை அழுத்தவும்.

 

 

இந்தப் பக்கத்தில் பரீட்சிப்புப் பெட்டிகளில் அடையாளமிடுவதன் மூலம் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும் கட்டணங்களைத் தெரிவு செய்து கொள்ள முடியும். அதே போல எதிர்கால கொடுப்பனவொன்றை (விருப்பத் தெரிவு) நீங்கள் சேர்த்துக் கொள்ள விரும்பினால் Future Payments பொத்தானை அழுத்தி நீங்கள் செலுத்த விரும்பும் தொகையை அதில் குறிப்பிடுவதன் மூலம் அவ்வாறு செய்ய முடியும். பின்னர் Submit என்ற பொத்தானை அழுத்தவும்.

 

 

விபரங்களைச் சரிபார்த்த பின்னர், கொடுப்பனவுப் பிரிவுக்கு உங்களை நெறிப்படுத்தும் பொருட்டு தயவுசெய்து Pay பொத்தானை அழுத்தவும்.

 

தற்பொழுது VISA மற்றும் MasterCard என்பவற்றுக்கு மட்டுமே பொருந்தும்.

 

 

When Amex is selected as the Payment method and a click on the Pay button, will redirect to summary page. Clicking on the Confirm button will redirect to the payment gateway.

 

 

 

பொதுக் காப்புறுதிப் பத்திரங்கள்

பொதுக் காப்புறுதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயல் ஆயுள் காப்பீட்டுக்கான கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் அதே விதத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.

பொதுக் காப்புறுதி பிரிவை அழுத்தி, Manage Policies பிரிவைத் தெரிவு செய்யுங்கள்.

 

 

நீங்கள் ஏற்கனவே காப்புறுதிப் பத்திரத்தின் இலக்கத்தை உள்ளிடாதிருந்தால், தரப்பட்டிருக்கும் பெட்டியில் அந்த இலக்கத்தைத் தட்டச்சு செய்து சேர்க்கவும். அதன் பின்னர் வரும் பட்டியலிலிருந்து காப்புறுதி வகையைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். (அதாவது அனைத்துமடங்கிய) மோட்டார் வாகன காப்புறுதி அல்லது மோட்டார் வாகனம் சாராத காப்புறுதி பத்திரம் அதன் பின்னர் Add Policy பொத்தானை அழுத்தவும். பின்னர் கீழேயுள்ள அட்டவணையிலிருந்து தவணைக் கட்டணத்தைச் செலுத்தும் பொருட்டு Renew பொத்தானை அழுத்தவும்.

 

*For further details please contact 0112 357 357

விபரங்களைப் பார்க்கவும்
 

வங்கிகளுக்கூடாக நேரடியாகக் கொடுப்பனவுகளை மேற்கொள்ளல்

வாடிக்கையாளர்கள் தமது அனைத்து நேரடி வங்கிக் கொடுப்பனவுகளையும் பின்வரும் வங்கிக் கணக்குகளில் செலுத்த முடியும். இது தொடர்பாக வாடிக்கையாளர்கள் கொடுப்பனவுக்கு அதிகாரமளிப்பதற்கு முன்னர் குறிப்பு பகுதியில் பின்வரும் விடயங்களைக் குறிப்பிடுதல் வேண்டும்.

1. முழுப் பெயர்
2. காப்புறுதிப் பத்திரத்தின் இலக்கம்

மேலும், கொடுப்பனவு உறுதிச் சீட்டின்/ ஒன்லைன் கொடுப்பனவு உறுதிப்படுத்தலின் பிரதியொன்றை வைத்திருக்குமாறு தயவுசெய்து வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவும்.

ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள்

1. சம்பத் வங்கி   நவம் மாவத்தை கிளை 092960000104
2. கொமர்ஷல் வங்கி யூனியன் பிளேஸ் கிளை 1484444444
3. மக்கள் வங்கி யூனியன் பிளேஸ் கிளை 014100120112337
4.  இலங்கை வங்கி யூனியன் பிளேஸ் கிளை 0000164657
5.  ஹற்றன் நஷனல் வங்கி தலைமை அலுவலகக் கிளை 003010313831 
6.  தேசிய சேமிப்பு வங்கி தலைமை அலுவலகக் கிளை 100011141139 
7.  நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி கறுவாத் தோட்டக் கிளை 011106000275  

 

பொதுக் காப்புறுதிப் பத்திரங்கள்

1. கொமர்ஷல் வங்கி யூனியன் பிளேஸ் கிளை 1480020022 
2.  மக்கள் வங்கி யூனியன் பிளேஸ் கிளை 014100160112335
3.  ஹற்றன் நஷனல் வங்கி தலைமை அலுவலகக் கிளை 003010011166
4.  சம்பத் வங்கி தலைமை அலுவலகக் கிளை 002960001543
5.  இலங்கை வங்கி கூட்டாண்மை (Corporate) கிளை 0000000464 
6.  செலான் வங்கி   மிலேனியம் கிளை   086433464695001
7.  DFCC வங்கி பொரளை கிளை 012001002417
 
விபரங்களைப் பார்க்கவும்
 
 

ஆயுள் காப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்காக mCash கொடுப்பனவு

படிமுறை 1

வாடிக்கையாளர் mCash சேவைக்கு தன்னைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அழைக்கவும் #111#

தொடர்பு கொள்ள விரும்பும் மொழி குறித்த இலக்கத்தை உட்படுத்தி அனுப்பி வைக்கவும்

உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்தவும்

1 என தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும்

4 இலக்கங்களைக் கொண்ட இரகசிய அடையாள இலக்கமொன்றை (PIN) குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்

4 இலக்கங்களைக் கொண்ட PIN இலக்கத்தை மீள உட்படுத்தி அனுப்பி வைக்கவும்

வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது

 

படிமுறை 2

mCash கொடுப்பனவு முறைக்கூடாக ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கம்பனி காப்புறுதி தவணைக் கட்டணங்களைச் செலுத்துதல்

அழைக்கவும் #111#

97 ஐ தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும்

கொடுப்பனவு நிறுவனங்களுடன் சம்பந்தப்பட்ட இலக்கத்தை தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும்

1 ஐ தட்டச்சு செய்து அனுப்பவும்

1 ஐ தட்டச்சு செய்து அனுப்பவும்

4 இலக்க PIN இலக்கத்தை உள்ளிட்டு அனுப்பி வைக்கவும்

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் ஆயுள் காப்பீட்டு பத்திர இலக்கத்தை உள்ளிட்டு அனுப்பவும்

கொடுப்பனவுத் தொகையைக் குறிப்பிட்டு அனுப்பவும்

95 ஐ தட்டச்சு செய்து அனுப்பி வைக்கவும்

கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது

 

முக்கியமான அறிவித்தல்கள்

• குறுந்தகவல் (SMS) முறைக்கூடாக கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான தகவல்களை அனுப்பி வைப்பதன் மூலம் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் வாடிக்கையாளர்களுக்கு புறம்பாக அறிவிக்கும்.

• கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்படுவதனை அடுத்து வாடிக்கையாளர் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பின்வரும் குறுந் தகவலைப் பெற்றுக் கொள்வார்.

• கொடுப்பனவு பற்றுச் சீட்டு அல்லது வைப்புப் பற்றுச் சீட்டு வாடிக்கையாளருக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

• இந்த USSD சங்கேத திரையிலுள்ள விடயங்கள் காலத்துக்குக் காலம் மாற்றமடைய முடியும்.

விபரங்களைப் பார்க்கவும்
 
 

ஆயுள் காப்பீட்டுக் கொடுப்பனவுகளுக்கு eZ Cash கொடுப்பனவு

படிமுறை 1

• முதலில் நீங்கள் eZ Cash சேவைக்கென உங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்

 

படிமுறை 2

• அதன் பின்னர்

காப்புறுதிப் பத்திர இலக்கத்தை உள்ளிடவும்

தவணைக் கட்டணத் தொகையை உள்ளிடவும்

கொடுப்பனவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டால், கீழே காட்டப்பட்டுள்ள விதத்தில் உங்களுக்கொரு உறுதிப்படுத்தல் செய்தி கிடைக்கும்

கொடுப்பனவு வெற்றியடையாவிட்டால் கீழே காட்டப்பட்டுள்ள விதத்தில் அது தோல்வியடைந்தது தொடர்பான ஒரு தகவல் உங்களுக்குக் கிடைக்கும்

படிமுறை 3

• ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் குறுந்தகவலுக்கூடாக (SMS) கொடுக்கல் வாங்கல் விபரங்களை அனுப்பி வைப்பதன் மூலமும் வாடிக்கையாளருக்குப் புறம்பாக அறிவித்தல் வழங்கும்

 

படிமுறை 4

• வெற்றிகரமாக கொடுப்பனவு மேற்கொள்ளப்படுவதனை அடுத்து வாடிக்கையாளர் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பின்வரும் குறுந்தகவலைப் பெற்றுக் கொள்வார்

 

படிமுறை 5

• கொடுப்பனவு பற்றுச் சீட்டு அல்லது வைப்புப் பற்றுச் சீட்டு வாடிக்கையாளருக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும்


 

• கொடுப்பனவு பூர்த்தியடையாதிருந்தால் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் அது பூர்த்தியடையாமை குறித்து குறுந்தகவல் மூலம் அறிவிக்கும்

• பின்வரும் காரணங்களினால் ஒரு கொடுப்பனவு பூர்த்தியடையாதிருக்க முடியும்:

- காப்புறுதிப் பத்திரம் காலாவதியாகியுள்ளது

- காப்புறுதிப் பத்திர இலக்கம் செல்லுபடியற்றதாக இருந்து வருகின்றது

• காப்புறுதிப் பத்திரம் காலாவதியாகியிருந்தால் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கம்பனியிலிருந்து வாடிக்கையாளர் பின்வரும் அறிவித்தலைப் பெற்றுக் கொள்வார்


• காப்புறுதிப் பத்திரம் செல்லுபடியற்றதாக இருந்து வந்தால் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கம்பனியிலிருந்து வாடிக்கையாளர் பின்வரும் குறுந்தகவலைப் பெற்றுக் கொள்வார்

விபரங்களைப் பார்க்கவும்
 
 

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் PEGI ஒன்லைன் சேவை (ஆளணியினருக்கான கூட்டுக் காப்புறுதி)

கூட்டு ஆயுள் காப்பீட்டு பத்திரங்களைக் கொண்டிருக்கும் முன்னரே பதிவு செய்த கம்பனிகள் தமது கொடுப்பனவுகள் தொடர்பான தகவல்களை நேரடியாக இற்றைப்படுத்த முடியும் Login

விபரங்களைப் பார்க்கவும்
 
 

E-Marine (கடல் சார்ந்தகாப்புறுதி)

முன்னரே பதிவு செய்துள்ள கம்பனிகள் தமது கடல் சார்ந்த காப்புறுதிப் பத்திரங்களை ஒன்லைனில் பெற்றுக் கொள்ள முடியும் Login