எம்மைப் பற்றி

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தினால் AA (lka) தரக் குறியீடு வழங்கப்பட்டிருக்கும் இலங்கையின் ஒரேயொரு காப்புறுதிக் கம்பனியாகும்.
இது கம்பனியின் வலுவான நிதிசார் ஆற்றல்களுக்கும், மூலதனமயமாக்கல் நிலைமைக்கும் சான்று பகர்கின்றது
எமது கதை

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் அரசுக்குச் சொந்தமான மிகப் பெரிய காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகின்றது. ஐந்து தசாப்தங்களுக்கு மேற்பட்ட நிதிசார் உறுதிப்பாடு மற்றும் நம்பிக்கை என்பவற்றுடன் கூடிய முன்னோடி பாரம்பரியமொன்றையும் நாங்கள் கொண்டுள்ளோம்.

அரசுக்குச் சொந்தமான ஒரு கூட்டுத்தாபனமாகவும், நாட்டின் முன்னோடிக் காப்புறுதி நிறுவனமாகவும் 1962 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இன்று காப்புறுதித் தொழில்துறையின் மிகப் பெரிய சொத்து அடித்தளமான இல.ரூ. 268 பில்லியன் சொத்துக்களை நிர்வகித்து வருகின்றது. மேலும், இல.ரூ. 152.5 பில்லியனுக்கு மேற்பட்ட அதன் ஆயுள் காப்பீட்டு நிதியமும், இல.ரூ. 6 பில்லியனுக்கு மேற்பட்ட மூலதனமும் உள்நாட்டுக் காப்புறுதித் தொழில்துறையின் ஆகக் கூடிய தொகைகளாக இருந்து வருகின்றன. இது எம்மை நாட்டின் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான காப்புறுதிச் சேவை வழங்குநர் நிறுவனமொன்றாக உருவாக்கியுள்ளது.

நம்பிக்கை குறித்த நன்மதிப்பு, இலங்கை எங்கிலும் செயற்பட்டு வரும் எமது 158 கிளைகளின் வலையமைப்பில் பணியாற்றி வரும் உயர் திறன்களுடன் கூடிய பழுத்த அனுபவம் வாய்ந்த காப்புறுதி நிபுணர்களின் மீதே தங்கியுள்ளது. அந்த ஊழியர் தொகுதியினர் தம்வசம் கொண்டிருக்கும் செறிவான, முழுமையான தொழில்நுட்ப அறிவு இதுவரையில் இலங்கையில் ஒரு நிறுவனம் கொண்டிருக்கும் ஈடிணையற்ற ஒரு ஊழியர் தொகுதியாக அதை ஆக்கியுள்ளது. கடந்த பல தசாப்தங்களாக நாங்கள் பன்முக அக்கறைகளுடன் வங்கித் தொழில் மற்றும் நிதி, சுகாதார பராமரிப்பு, சக்தி மற்றும் வலு, பயணம் மற்றும் ஓய்வு அதே போல கட்டுமானம் மற்றும் பொறியியல் போன்ற பல முதன்மையான கைத்தொழில்களுக்கு ஊடாக முதலீடுகளை மேற்கொண்டுள்ளோம். அதன் மூலம் எமது வலிமையை மேலும் அதிகரித்துக் கொண்டிருப்பதுடன், முன்னேற்றத்தையும் சாதித்துக் கொண்டுள்ளோம்.

தேசத்தின் நம்பிக்கைக்குரிய காப்புறுதி நிறுவனமாக இருந்து வருதல் வேண்டுமென்ற கம்பனியின் ஒட்டுமொத்த தூரநோக்கினை சாதித்துக் கொள்வதை நோக்கிய எமது வெற்றிகரமான, தொடர்ச்சியான பயணத்தை நாங்கள் மேற்கொண்டு வருவதுடன், இந்தப் பயணத்தில் நிதிசார் சுயாதீனம் என்ற ஒரு கலாசாரத்தை உருவாக்கியுள்ளோம்.

வரையறுக்கப்பட்ட இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் பீஎல்சி51.34%
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனத்தின் மிகப் பெரிய பங்குதாரராக இருந்து வருவதுடன், அதில் 51.34% பங்குகளைக் கொண்டுள்ளது. லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் நிறுவனம் மக்களுக்கு சுகாதார பராமரிப்புச் சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டு வரும் பொது மக்களுக்குப் பங்குகள் வழங்கப்பட்டிருக்கும் ஒரு கம்பனியாகும்.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னொஸ்டிக்ஸ் (பிரைவட்) லிமிடட் 100%
வரையறுக்கப்பட்ட லிட்ரோ கேஸ் லங்கா99.94%
இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தில் 99.94% பங்குகளை வைத்திருப்பதன் மூலம் அதன் முதன்மைப் பங்காளராக இருந்து வருகின்றது. லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் இலங்கையின் முன்னணி திரவ எரிவாயு இறக்குமதியாளராகவும், விநியோகஸ்தராகவும் செயற்பட்டு வருகின்றது.
லிட்ரோ கேஸ் டர்மினல் லங்கா (பிரைவட்) லிமிடட் 100%
லிட்ரோ கேஸ் டர்மினல் நிறுவனம் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு முழுதும் உரித்தான ஒரு துணை நிறுவனமாக இருந்து வருவதுடன், அது வீட்டுபயோக வர்த்தக மற்றும் தொகை கொள்வனவு வாடிக்கையாளர்களுக்கென திரவ எரிவாயுவை களஞ்சியப்படுத்தி வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.
கெனோவின் ஹொட்டல்ஸ் அன்ட் ஸ்பாஸ் (பிரைவட்) லிமிடெட் 100%
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துக்கு முழுவதும் சொந்தமான ஒரு துணை நிறுவனமான இந்தக் கம்பனி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓய்வு நிறுத்த இடங்களில் வசதிகளை வழங்கி வருகின்றது. அதிவேக நெடுஞ்சாலையைப் பயன்படுத்தி வரும் பயணிகளுக்கு பல்வேறு விதமான சேவைகள் இந்நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன.
கன்வில் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடட்45.95%
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கேன்வில் ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடட் நிறுவனத்தில் 45.95% பங்குகளைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் ஹோட்டல் கருத்திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகளை முகாமைத்துவம் செய்யும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
சைனோலங்கா ஹொட்டெல்ஸ் அன்ட் ஸ்பா (பிரைவட்) லிமிடட்100%
ஹெலன்கோ ஹொட்டெல்ஸ் அன்ட் ஸ்பா (பிரைவட்) லிமிடட்100%
மனேஜ்மன்ட் சேர்விசஸ் ரக்ஷன (பிரைவட்) லிமிடட்100%
மனேஜ்மன்ட் சர்விசஸ் ரக்ஷன நிறுவனம் முழுவதும் உரித்தான ஒரு துணை நிறுவனமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கு சம்பள பட்டியல் முகாமைத்துவ சேவைகளை வழங்கி வருகின்றது. வெளிச் சந்தைக்கு அல்லது வெளித் தரப்புகளுக்கு சேவைகளை அல்லது உற்பத்திகளை வழங்கும் செயற்பாட்டில் அது ஈடுபட்டிருக்கவில்லை.
 
மொத்தச் சொத்துக்கள்
2022
LKR 274 Bn.
2021
LKR 268 Bn.
 
PBT
2022
LKR 12.47 Bn.
2021
LKR 11.7 Bn.
மொத்த வருவாய்
2022
LKR 63.6 Bn.
2021
LKR 64 Bn.
GWP
2022
LKR 41.2 Bn.
2021
LKR 43.2 Bn.
 
பிரகடனப்படுத்தப்பட்ட போனஸ் தொகை
2022
LKR 10.49 Bn.
2021
LKR 9.8 Bn.
ஆயுள் நிதியம்
2022
LKR 156.7 Bn.
2021
LKR 152.5 Bn.
 
விழுமியங்கள்

  • பரஸ்பர நம்பிக்கையும் மரியாதையும்
  • ஒற்றுமை
  • தொழில்முறை அர்ப்பணிப்பு
  • நெறிமுறைகள் மற்றும் நேர்மை
  • சிறப்பிற்காக பாடுபடுங்கள்

தரம் தொடர்பான கொள்கை

ஸ்ரீ லங்கா இன்ஷுசூரன்ஸ் காப்புறுதி செய்யப்பட்டிருப்பவர்களுக்கு நட்டோத்தரவாதம் வழங்கும் விடயத்தில் தொடர்ச்சியான விருத்தி நிலைமைகளை எடுத்து வருவதற்கூடாக வாடிக்கையாளர் மற்றும் அக்கறைக் கொண்டிருக்கும் தரப்பினர் ஆகியோரைத் திருப்திபடுத்தும் விடயத்துக்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

தரம் சார்ந்த குறிக்கோள்களை உருவாக்கிக் கொள்வதற்கும், வினைத்திறன் மிக்க தொடர்பாடல், பயிற்சி, செயல் தூண்டல், நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களையும் புரிந்து கொள்ளல் என்பவற்றுக்கூடாக அந்தக் குறிக்கோள்களை காலத்துக்குக் காலம் மீளாய்வு செய்வதற்கும் ஒரு சட்டகத்தை வழங்கி வருகின்றோம்.

COVID 19 Safety Policy

Sri Lanka Insurance Corporation Limited, the insurance provider to the nation by indemnifying the insured is committed to comply with the Ministry of Health Guidelines, Legal and Other Regulatory Requirements to safeguard it's employees, customers and other stake holders to the company and continually improve COVID 19 Safety Management System.

We provide a framework to comply with COVID L9 Safety Control Plans through effective communication, motivation understanding of all employees throughout the organization and by establishing a Covid Task Force. We have considered the COVID Safety Control Plan compliance as our organizational objective.

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை ஏன் தெரிவு செய்ய வேண்டும்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் நிதிசார் உறுதிப்பாடு மற்றும் காப்புறுதித் தொழில்துறையில் மிகச் சிறந்த அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப அறிவுத் தளத்துடன் கூடிய அரசுக்குச் சொந்தமான ஒரு கம்பனி என்ற முறையில் நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் நன்மதிப்பு என்பன தனிநபர்களுக்கும் மற்றும் வணிக நிறுவனங்களுக்கும் சட்டப் பொறுப்புக்களுக்கென நம்பகமான மற்றும் நீண்ட கால முதலீட்டுத் தீர்வுகளை வழங்கி வருகின்றன.

இல. ரூ. 268 பில்லியன் பெறுமதியான மிகவும் பிரம்மாண்டமான ஆதனத் தொகுப்பை நாங்கள் கொண்டிருப்பதுடன், இல.ரூ. 152.5 பில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டு நிதியத்தின் பக்க பலத்தையும் கொண்டுள்ளோம். இது இலங்கையின் காப்புறுதித் தொழில்துறையின் வரலாற்றில் மிகப் பெரிய போனஸ்  தொகையை (இல.ரூ. 9.8 பில்லியன்) பிரகடனம் செய்வதற்கான வாய்ப்பினை எமக்கு வழங்குகின்றது. தவணைக் கட்டணத்தின் அடிப்படையிலன்றி காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் மொத்தத் தொகையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கும் விதத்தில் முதல் ஆண்டிலிருந்தே எமது அனைத்து ஆயுள் காப்பீட்டுதாரர்களுக்கும் நாங்கள் கணிசமான அளவில் பெரிய போனஸ் தொகை ஒன்றுக்கு உத்தரவாதம் வழங்குகின்றோம். Unique Reinsurance மற்றும் Swiss Re போன்ற உலகப் புகழ் வாய்ந்த மீள் காப்புறுதிக் கம்பனிகளின் பக்க பலத்துடன் காப்புறுதித் தொழில்துறையின் மற்றொரு சாதனையையும் நாங்கள் நிகழ்த்தியுள்ளோம். இதுவரையில் இலங்கையில் செலுத்தப்பட்ட ஆகக் கூடிய காப்புறுதித் தொகையான 39.5 பில்லியன் இலங்கை ரூபா கோரிக்கைத் தொகையைச் செலுத்தியதன் மூலம் அந்தச் சாதனையை நாங்கள் நிகழ்த்தியுள்ளோம்.

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் நிதிசார் உறுதிப்பாடு தொடர்பாக பிட்ச் ரேட்டிங்ஸ் அமைப்பினால் AA (lka) தரக் குறியீட்டை பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையின் ஒரேயொரு காப்புறுதிக் கம்பனியாகும். மேலும், வலுவான ஆளுகை மற்றும் இலங்கை முழுவதும் செயற்பட்டுவரும் 158 கிளை வலையமைப்பு நெடுகிலும் இடம்பெற்று வரும் தொடர்ச்சியான விருத்தி நிலைமைகள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் சர்வதேச ரீதியில் குறியீடு செய்யப்பட்டிருக்கும் தர முகாமைத்துவ கோட்பாடுகள் தொடர்பாக நாங்கள் ISO 9001: 2015 தர முகாமைத்துவ சான்றிதழைப் பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையின் ஒரேயொரு காப்புறுதி கம்பனியாகவும் இருந்து வருகின்றோம்.

History
1962 – இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஸ்தாபிதம்
2001 – ஒரு பயங்கரவாதத் தாக்குதலையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இலங்கையில் இதுவரையில் செலுத்தப்பட்ட ஆகக் கூடிய காப்புறுதித் தொகையான இல.ரூ. 39.5 பில்லியன் செலுத்தப்பட்டது
2003 – தனியார் பொறுப்பு வரையறுக்கப்பட்ட ஒரு கம்பனியாக மாற்றப்பட்டது
2009 – தேசிய மயமாக்கப்பட்ட ஒரு நிறுவனமாக மீண்டும் எடுத்து வரப்பட்டது
2019 – AAA(lka) தரக் குறியீட்டைப் பெற்றுக் கொண்ட முதலாவது ஒரேயொரு காப்புறுதிக் கம்பனியாக இருந்து வந்தமை