தொழில்கள்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் தொழில்கள்

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் இடையறாத வளர்ச்சியின் மூலாதாரம் எமது அணியின் வளைந்து கொடுக்கும் ஆற்றலாகும். இந்த ஊழியர் அணி எமது நிறுவனத்தின் பெறுமதிமிக்க ஒரு சொத்தாக இருந்து வருகின்றது. கடந்த சில தசாப்த காலங்களின் போது இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் காப்புறுதி தொழில்துறையில் தொழில்நுட்ப ரீதியில் உயர்மட்டத்தில் வளர்ச்சியடைந்திருக்கும் ஊழியர் அணியொன்றைப் போஷித்து வளர்த்து வந்துள்ளது. மேலும், நீண்ட கால உறவுகளைப் போஷித்து வளர்க்கும் விடயத்தில் நாணயம் முதன்மையான ஒரு கூறாக இருந்து வருகிறது என்ற விடயத்திற்கு எமது பணியிட கலாசாரம் உயர் மதிப்பளித்து, அதனை மேம்படுத்தி வருகின்றது.

செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாசாரத்தை நாங்கள் கொண்டிருப்பதுடன், அது தொழில் வளர்ச்சிக்கும், தனிப்பட்ட அபிவிருத்திக்குமான ஈடிணையற்ற வாய்ப்புக்களை ஊழியர்கள் எமது நிறுவனத்திற்குள்ளேயும், நிறுவனம் நெடுகிலும் சாதித்துக் கொள்வதற்கான வாய்ப்பினை உருவாக்குகின்றது. இந்த செயலாற்றுகையை மையமாகக் கொண்ட கலாசாரம் காரணமாக இன்று எமது நிறுவனம் பெருமளவுக்கு விரும்பப்படும் தொழில்தருநர் நிறுவனமாக மாற்றமடைந்துள்ளது. எமது அடிப்படை விழுமியங்கள் மற்றும் திறன் தேவைகள் என்பவற்றுடன் இணைந்திருக்கும் தனிநபர்களை நாங்கள் வேலையில் அமர்த்தியுள்ளோம். தேவையான தகைமைகளைப் பெற்றுக் கொள்ளல் மற்றும் கலாசார பொருத்தப்பாடு என்பவற்றுக்கு நாங்கள் அதே விதத்தில் முன்னுரிமையை வழங்கி வருகின்றோம். அதே வேளையில், பூச்சிய பாரபட்சம் நிலையையும், அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்குவதனையும் நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்.

எமது கம்பனியின் சாதனைகளில் ஒவ்வொரு ஊழியரும் வகித்து வரும் வகிபங்கு குறித்து அவர்களுக்கு மத்தியில் நாங்கள் ஒரு பெருமித உணர்வை ஊட்டுகின்றோம். தொடர்ச்சியான பயிற்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றுக்கூடாக எமது போட்டித் திறனைப் பராமரித்து வருகின்றோம். கடந்த சில வருடங்களின் போது மட்டும் பயிற்சி மற்றும் அபிவிருத்தி என்பவற்றில் நாங்கள் 50 மில்லியன் இலங்கை ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை முதலீடு செய்துள்ளோம். கண்டறியப்படாத தொழில் பாதைகளை கண்டறிந்து கொள்வதற்கு நாங்கள் எமது அணியினருக்கு உதவுவதுடன், அதன் மூலம் ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ளும் சதவீதம் 97% ஆக இருந்து வருகின்றது.

ஒரு தொழில் தருநர் என்ற முறையில் எமது வணிகச் சின்னம் கவனமாகப் போஷித்து வளர்க்கப்பட்டு வருவதுடன் இணைந்த விதத்தில் எமது ஊழியர்கள் ஈடிணையற்ற பயன்களின் ஒரு தொகுதியை அனுபவித்து வருகின்றார்கள். அனைத்துமடங்கிய மருத்துவ பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியமான வேலை - வாழ்க்கை சமநிலையொன்றை சாதித்துக் கொள்வதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்கும் பிரத்தியேகமான வசதிகளின் ஒரு தொகுதி என்பவற்றை இது உள்ளடக்குகின்றது.  வெகுமதிகள் மற்றும் அங்கீகாரம் என்பவற்றுடன் அதி சிறந்த செயலாற்றுகை மதித்துப் போற்றப்படுகிறது.

தற்போதைய தொழில்
தற்போது தொழில் வாய்ப்புக்கள் இல்லை
நாங்கள் அனைவரும் சேர்ந்து பணிபுரிவோம்
சுயவிபரக் கோவை MS Word அல்லது PDF வடிவில் 3MB குறையாத அளவில் இருந்து வர வேண்டும்