வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தனியுரிமைக் கொள்கை

இத் தனியுரிமை அறிக்கை, “www.srilankainsurance.com” என்ற எங்கள் இணையத்தளத்தை நீங்கள் பார்வையிடும்போது, ​​இ.கா.கூ. எவ்வாறு உங்கள் தகவல்களை சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, வெளிப்படுத்துகிறது, மற்றும் பாதுகாக்கிறது என்பதை விவரிக்கிறது. தரவுப் பாதுகாப்புச் சட்டங்களின் பொருந்தக் கூடிய விதிகளுக்கு இணங்க, உங்கள் தரவின் தனியுரிமையை நாங்கள் சரியாகக் கருத்தில் கொள்கிறோம். இந்த தளத்தைப் பயன்படுத்து வதன் மூலம், இந்த தனியுரிமை அறிக்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு நீங்கள் உட்படுகின்றீர்கள்.

I. பயன்படுத்துவதன் நோக்கம்

கீழே கொடுக்கப்பட்டுள்ள தரவுப் பாதுகாப்பு அறிவிப்பு, இ.கா.கூ. தின் இணைய இருப்பு தொடர்பானது, மற்றும் இணையத்தளத்தில் இ.கா.கூ.தின்  பயன்பாட்டிற்கான இணைப்புக்கள் உள்ளன.

 

II. உங்கள் தரவைப் பயன்படுத்துதல்

நீங்கள் எங்கள் இணையத்தளத்தைப் பார்வையிடும்போது, ​​உங்கள் தனிப்பட்ட தரவு எவ்வாறு செயலாக்கப்படும் என்பதையும், தரவுப் பாதுகாப்புச் சட்டங்களில் குறிப்பிடப் பட்டுள்ள உங்கள் உரிமைகளைப் பற்றியும் உங்களுக்குத் தெரியப் படுத்துகின்றோம்.

அ. தரவு பாதுகாப்பு அதிகாரியை அணுகுதல்

தரவு பாதுகாப்பு அதிகாரி,

இணக்கத் திணைக்களம்,

08வது மாடி,

வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம்,

இல. 21, வொக்ஸ்ஹால் வீதி, கொழும்பு 02

தொலைபேசி: +94 11  2357000

மின்னஞ்சல்:  email@srilankainsurance.com

ஆ. நாங்கள் பயன்படுத்தும் தரவின் வகைகள், மற்றும் தனிப்பட்ட தரவை செயலாக்கும் நோக்கங்கள்

பொதுவாக, இ.கா.கூ. ஆனது அதன் இணையத்தளத்திற்கு வருபவர்களின் தனிப்பட்ட அல்லது கண்டறியக்கூடிய எந்தத் தரவையும் (உ-ம்: ஐ.பி./இ.நெ. முகவரிகள்) சேமிக்காததால், எங்கள் இணையதளத்தை பெயர் அறியப்படாத வர்களும் பார்வையிடலாம்.

நீங்கள் இந்த இணையத்தளத்தைப் பார்வையிடும் போது, நீங்கள் பயன்படுத்தும் கணினி அல்லது சாதனத்தைப் பற்றிய சில தரவை நாங்கள் தானியங்கியாகவே பெறுவோம், உங்கள் இணைய நெறிமுறை (IP) முகவரி; நீங்கள் பயன்படுத்தும் உலாவி அல்லது சாதன வகை பற்றிய தகவல்; குக்கீகள், பிக்சல் குறிச்சொற்கள் மற்றும் பிற ஒத்த தொழில்நுட்பங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட தரவு; உங்கள் வருகையின் தேதி மற்றும் நேரம்; மற்றும் இந்தத் தளத்தைப் பார்வையிடு வதற்கு முன்பு நீங்கள் உடனடியாகப் பார்வையிட்ட இணையப் பக்கம் போன்றவையும் இதில் அடங்கும்: இந்த தளத்தில் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் அல்லது உள்ளடக்கத்தின் வகை மற்றும் பெயர், மற்றும் பார்த்த நேரம், போன்ற பிற உள்ளடக்கம் பற்றிய தரவையும் நாங்கள் சேகரிக்கிறோம்.

இ. சட்டக் கட்டமைப்பு

2006 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் பரிவர்த்தனைச் சட்டம், 2006 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க கட்டணச் சாதனங்கள் மோசடிச் சட்டம், 2007 அம் ஆண்டின் 24ஆம் இலக்க அறிவுசார் சொத்துரிமைச் சட்டங்கள், மற்றும் தனிப்பட்ட தரவு செயலாக்கத்திற்கு பொருந்தக்கூடிய அனைத்து சட்டங்களின் அடிப்படையில் உங்கள் தரவைச் செயலாக்குகிறோம்.

ஈ. தரவு பயன்பாடு

இ.கா.கூ. ஆபத்துக்கான எழுத்துறுதி, உரிமைகோரல்களை மதிப்பிடுவதற்கும், மற்றும் மிகவும் விரும்பிய காப்பீட்டுத் தீர்வு/ சேவைகளை வழங்குவதற்கும், தனது வாடிக்கையாளர்கள், மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர் ஆகியோரின் தனிப்பட்ட தரவை சேகரித்து செயலாக்குகின்றது. சட்டம் அல்லது ஒழுங்கு முறைகள், செயல் அல்லது புள்ளியியல் செயல்பாடுகள் போன்றவற்றால் தேவைப்படும் பணிகளை மேற்கொள்வது உட்பட, தயாரிப்பு, மற்றும் சேவை மேம்பாடு, தரவு பாதுகாப்பு, சந்தைப் படுத்தல், மற்றும் பிற தேவையான வாடிக்கையாளர் உறவு மேலாண்மை பணிகளை மேம்படுத்துதல், மற்றும் துஷ்பிரயோகத் தடுப்பை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கும், தனிப்பட்ட தரவை சேகரித்து செயலாக்குகின்றது. தனிப்பட்ட தரவு முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காகவும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படும். இத் தேவைகளுக்கு இணங்க, சட்டப் பூர்வமாக சரியான காரணம் இருப்பதை உறுதி செய்து, தனிப்பட்ட தரவு செயலாக்கப்படும்.

இதில் சட்டம் அல்லது ஒழுங்குமுறைகள், செயல் அல்லது புள்ளியியல் செயல்பாடுகள் போன்றவற்றால் தேவைப்படும் பணிகளை மேற்கொள்வது உட்பட; தயாரிப்பு மற்றும் சேவை மேம்பாடு; தரவு பாதுகாப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் பிற தேவையான வாடிக்கையாளர் உறவு மேலாண்மை பணிகள் மற்றும் துஷ் பிரயோகத்தைத் தடுப்பது போன்றவற்றை மேம்படுத்துதல், முன் வரையறுக்கப்பட்ட நோக்கங்களுக்காக, மற்றும் ஏனைய தொடர்புடைய விஷயங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். இந்தத் தேவைகளுக்கு ஏற்ப, சட்ட அடிப்படையில் சரியான காரணம் உள்ளது என்பதை உறுதி செய்து கொண்டே தனிப்பட்ட தரவுகள் செயலாக்கப்படும்.

தரவுப் பாதுகாப்புச் சட்டத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள அளவிற்கு, கீழே குறிப்பிடப் பட்டுள்ள நோக்கங்களுக்காக இ.கா.கூ. தனிப்பட்ட தரவை வெளியிடலாம்:

அ) வணிக நிறுவனத் தொகுதிகளுக்கு.

ஆ) சேவை கூட்டாளர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு

இ) பெரு நிறுவன பரிவர்த்தனையின் சூழலில் வணிக கூட்டாளர்களுக்கு (உ+ம்: இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல் போன்றவை).

ஈ) ஒழுங்குமுறை மற்றும் சட்ட அமுலாக்கல் நிறுவனங்களுக்கு.

உ) பொருத்தமான “வெளிப்படுத்தாத ஒப்பந்தங்கள்” அடிப்படையில் தரவைச் சேமிப்பதற்கான வசதிகளை வழங்கும் மூன்றாம் தரப்பினர்

ஊ) வழக்கறிஞர்கள் மற்றும் பிற தொழில்முறை சேவை நிறுவனங்கள் (எங்கள் தணிக்கையாளர்கள், ஆக்சுவரிகள் உட்பட மறுகாப்பீட்டாளர்கள் ஆகியோர்கள்)

நிறுவனத்தின் இணையதளத்தை நிர்வகிக்கவும், முகாமைப் படுத்தவும் நாங்கள் தரவைப் பயன்படுத்தலாம்; உங்கள் பயன அனுபவத்தைத் தனிப்பயனாக்குங்கள்; இ.கா.கூ. தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றி உங்களைத் தொடர்பு கொள்ளவும், விளம்பரப் பொருட்கள், மற்றும் சலுகைகளைப் பகிர்ந்து கொள்ளவும் (ஒட்டுமொத்தமாக "சந்தைப்படுத்தல் தொடர்புகள்" என்று அழைக்கப்படுகிறது), பெருநிறுவன பரிவர்த்தனைகள், தணிக்கைகள், மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற எங்கள் உள் வணிக நோக்கங்களைச் செயல்படுத்தவும், நீங்கள் இந்த தளத்தைப் பயன்படுத்துதல், மற்றும் எங்களுடன் தொடர்புகொள்வது பற்றியும், ஆராய்ச்சி, மற்றும் பகுப்பாய்வுகளை நடத்துவதற்கும், புதிய தயாரிப்புக்களை உருவாக்கு வதற்கும், எங்களுடைய தற்போதைய தயாரிப்புகளையும், மற்றும் சேவைகளையும் மேம்படுத்துதல்; பயன்பாட்டு போக்குகளை அடையாளம் காணல், எங்கள் விளம் பரங்களின் செயல்திறனை மதிப்பிடுதல், எங்கள் விளம்பர பிரச்சாரங்களை மேம்படுத்துதல், மற்றும் எங்கள் தகவல்தொடர்புகளின் செயல்திறனை தீர்மானித்தல் என்பனவற்றிற்கும் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம்.

 

III. குக்கீகள் மற்றும் பிற இணைய தொழில்நுட்பங்கள்

இந்தத் தளம், மற்றும் மூன்றாம் தரப்பு வழங்குநர்களிட மிருந்து வரும் குக்கீகள், மற்றும் தொழில்நுட்பங்கள் உட்பட, சில அம்சங்களையும் செயல்பாட்டையும் செயல்படுத்தவும், மேலும் இந்தத் தளத்தையும் எங்கள் சேவைகளையும் மேம்படுத்த எங்களுக்கு உதவும் கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் குக்கீகளை பயன் படுத்துகிறது. இந்தத் தளம் அமர்வு குக்கீகளை (உங்கள் உலாவியை மூடும் போது காலாவதியாகும்)யும், மற்றும் நிலையான குக்கீகளை (உங்கள் உலாவியை மூடிய பிறகும் அவற்றை நீக்கும் வரை அல்லது அவை காலாவதியாகும் வரை உங்கள் சாதனத்தில் இருக்கும்) யும் பயன்படுத்தலாம். குக்கீகள் மூலம் உங்கள் சாதனத்திலிருந்து தரவு சேகரிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் மறுக்கலாம்.

 

IV. தரவு பாதுகாப்பு

இணையம் அல்லது தரவு சேமிப்பகம் மூலம் தரவு பரிமாற்றம் 100% பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்க முடியாது என்றாலும், அத்தகைய அபாயத்தைத் தணிக்க நியாயமான நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். தரவின் பாதுகாப்பு சமரசம் செய்யப் படுவதை நீங்கள் சந்தித்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியில் உள்ள தரவு பாதுகாப்பு அதிகாரியை உடனடியாகத் தொடர்பு கொள்ளவும்.

 

V. தனியுரிமை அறிவிப்பைப் புதுப்பித்தல்

தேவைப்படும் போது இத் தனியுரிமை அறிவிப்பை நாங்கள் மதிப்பாய்வு செய்கிறோம்.