நிறுவனத்துறை சமூகப் பொறுப்பு

இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் நிறுவனத் துறை சமூகப் பொறுப்பு

நாட்டின் முன்னோடி காப்புறுதி நிறுவனம் என்ற முறையில் நாங்கள் வகித்து வரும் நிர்ணயகரமான பங்கினையும், பொறுப்பு வாய்ந்த கம்பனித்துறை பிரஜை என்ற முறையில் நாங்கள் செயற்பட்டு வரும் சமூகங்களுக்குள் ஏற்படுத்தி வரும் தாக்கத்தையும் புரிந்து கொண்டுள்ளோம். நாங்கள் மூன்று துறைகளில் சமூக முன் முயற்சிகளை துவக்கி வைத்திருப்பதுடன், இலங்கை நெடுகிலும் சமூக பொருளாதார நிலைபேறான தன்மையை போஷித்து வளர்ப்பதில் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கணிசமான அளவிலான பங்களிப்பினை வழங்கி வருகின்றது:

பிள்ளைகள்

கல்வி அத்திவாரத்துக்கூடாக எமது தேசத்தின் வருங்கால தலைமுறைகளைப் பலப்படுத்தும் ஒரு நீண்ட கால தூர நோக்குடன் இணைந்த விதத்தில் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் 2018 ஆம் ஆண்டில் சுப பெத்தும் தேசிய புலமைப் பரிசில் திட்டத்தை துவக்கி வைத்தது. இந்த முன்முயற்சிக்கூடாக 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை மற்றும் உயர் தரப் பரீட்சை என்பவற்றில் ஒவ்வொரு வருடமும் மாவட்ட மட்டத்தில் அதியுயர் சாதனைகளை நிகழ்த்தும் 300 மாணவர்களுக்கு – அவர்கள் இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பத்திரதாரர்களாக இருந்து வந்தாலும் சரி இருந்து வரா விட்டாலும் சரி - நாங்கள் வெகுமதிகளை வழங்கி வருகின்றோம்.

சமூகம்

அன்பளிப்புச் செய்வதற்கான அழைப்பு என்ற எமது இயக்கம் 2015 இல் துவக்கி வைக்கப்பட்டதுடன், அது ஒரு தனித்துவமான நிறுவனத்துறை சமூகப் பொறுப்புத்  திட்டமாக இருந்து வருகின்றது. இலங்கையர்களுக்கு மத்தியில் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வைத் தூண்டுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்நோய்க்குப் பெருமளவுக்குத் தேவைப்படும் நிதிகள், உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என்பவற்றை மஹரகமயில் அமைந்திருக்கும் அபேக்சா மருத்துவமனைக்கு அன்பளிப்புச் செய்வதே இதன் ஒட்டுமொத்த குறிக்கோளாக இருந்து வருகின்றது. கிடைத்து அழைக்காதுவிட்ட ஒவ்வொரு அழைப்புக்கும் (Missed Call) ரூபா 10 ஐ அன்பளிப்புச் செய்வதற்கான வாக்குறுதியை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் வழங்குகின்றது. இப் பிரச்சார காலப் பிரிவின் போது ஒவ்வொரு ஆண்டிலும் குறித்துரைக்கப்பட்டிருக்கும் ஓர் இலக்கத்திற்கு அழைப்பை எடுப்பதற்கு இலங்கையர்கள் எடுத்திருக்கும் ஒவ்வொரு முயற்சியின் அடிப்படையிலும் இது மேற்கொள்ளப்படும்.

அதன் அங்குரார்ப்பணம் துவக்கம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் அபேக்சா புற்று நோய் மருத்துவமனைக்கு ஒரு CPAP இயந்திரம், தேவையான மருந்துப் பொருட்கள், செயற்கை கால்கள் மற்றும் ஏனைய பங்களிப்புக்கள் என்பவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது. மிக அண்மையில் இந்த மருத்துவமனையின் சிறுவர் வார்டுக்கான தனிமைப்படுத்தல் அறையொன்றை நிர்மாணிப்பதற்கு உதவும் பொருட்டு 480,000 க்கு மேற்பட்ட தவறவிட்ட அழைப்புக்களை அடுத்து 5 மில்லியன் ரூபா பங்களிப்பை கூட்டுத்தாபனம் வழங்கியது.

கலாசாரம்

அவசர நிலை மற்றும் தேவை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் நிறுவனத்துறையின் சமூகப் பொறுப்பு முன்முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்து வரும் அதே வேளையில், கடந்த சில தசாப்த காலமாக நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கும் வலுவான பாரம்பரியங்களின் ஒரு பாகமாகவும் ஒரு சில செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். அத்தகைய வழமைகளில் ஒன்று அநுராதபுரத்தில் பொசொன் காலப் பிரிவில் யாத்திரிகர்களுக்கு உதவுவதாகும். இச் சேவையை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் 1990 தொடக்கம் மேற்கொண்டு வருகின்றது. இத்தனித்துவமான சேவைகள் ஒவ்வொரு வருடமும் அநுராதபுரம் புனித நகரத்தைச் சூழவுள்ள பிரதேசத்தில் காணாமற் போகும் தனி நபர்களையும், பொருட்களையும் கண்டு பிடித்துக் கொடுப்பதனை உள்ளடக்குகின்றன.

பெத்மக என்ற அமைவிடத்திலிருக்கும் ஒரு கேந்திர இடத்திலிருந்து 24 மணி நேரமும் செயற்பட்டு வரும் நாங்கள் மஹாமெவுன உயன, சிங்ஹ குளுண, மிரிஸ்ஸவெட்டிய, தூபாராமய மற்றும் சந்தஹிரு சேய ஆகிய 5 உப மையங்களுக்கூடாக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம். பொசொன் விழாவை கொண்டாடுவதற்கென நாட்டின் புராதன தலைநகரத்துக்கு வருகை தரும் பல இலட்சக்கணக்கான யாத்திரிகர்களுக்கு இந்தப் பெறுமதிமிக்க சேவையை அநுராதபுர மாவட்ட செயலகத்துடன் கூட்டாக இணைந்து நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். மிகிந்தலை புனித பூமி பிரதேசத்திற்கு ஒளியூட்டும் விடயத்திலும் நாங்கள் பங்களிப்புச் செய்து வருகின்றோம். அதே வேளையில், யாத்திரிகர்களுக்கு மத்தியில் புனித போதி பூஜை பாடல்களைக் கொண்ட சிறு புத்தகங்களையும் நாங்கள் விநியோகிக்கின்றோம்.

இது தவிர, விபத்து காப்புக் காப்புறுதி மற்றும் பண்டிகைக் காலத்தின் போது, யாத்திரிகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான வாகனப் பழுதுபார்ப்பு உதவி என்பவற்றுக்கூடாக இலங்கையின் பிரபல்யமான நீண்ட கால பாரம்பரியமிக்க பெரஹர விழாக்களின் போது நாங்கள் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு உதவிகளை வழங்குகின்றோம். அவர்கள் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றிருந்தாலும் சரி பெற்றிருக்காவிட்டாலும் சரி அவர்களுக்கு அச்சேவைகளை நாங்கள் வழங்குகின்றோம். இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கண்டி எசல பெரஹர, ருஹூணு கதிர்காம மகா தேவால பெரஹர, கங்காராம நவம் பெரஹர மற்றும் கெட்டபறு தேவால பெரஹர போன்ற நாட்டின் மிக பிரபல்யமான பல இலட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் பெரஹர விழாக்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பினை வழங்குகின்றது.