சுபபெத்தும் புலமைப்பரிசில்

சுபபெத்தும் புலமைப்பரிசில்

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப்  ‘சுப  பெத்தும்’ – புலமைப்பரிசில் திட்டமானது ஒவ்வொரு வருடமும் தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளில் சிறப்பாக சித்தியடைந்த  225 மாணவர்களுக்கு  வெகுமதி அளிக்கின்றது.

இந்த முயற்சிப்  பணியானது, நாட்டின் இளைய தலைமுறையினரை கவலையின்றி தங்கள் கனவுகளை பின்பற்றவும், நனவாக்கவும் தூண்டியுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ்  நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ரூ. 60 மில்லியன் மதிப்புள்ள 1,400 க்கும் மேற்பட்ட புலமைப்பரிசில்களை வழங்கியுள்ளது.

சுப பெத்தும்  புலமைப்பரிசில் திட்டம் ஒவ்வொரு வருடமும்  விண்ணப்பங்களுக்கு திறக்கப்படும் மற்றும் மாணவர்கள் ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸின்  உத்தியோகபூர்வ இணையத்தளமான www.srilankainsurance.com ஊடாக ஒன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 225 மாணவர்களுக்கு 3 பரீட்சைகளில்  (தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள்) புலமைப்பரிசில் வழங்கப்படும்.  ஒவ்வொன்றிலிருந்தும் முதல் 75 தரவரிசை விண்ணப்பதாரர்கள் புலமைப்பரிசில் பெற தகுதியுடையவர்கள். தரம் 5 புலமைப்பரிசில் மற்றும் க.பொ.த.சாதாரண தரத்திற்கு, மாவட்ட சாதனையின் அடிப்படையில்  தெரிவு செய்யப்படுவார்கள் மற்றும் க.பொ.த உயர்தர விண்ணப்பதாரர்களுக்கு தேசிய மட்ட சாதனையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும்.

சுப பெத்தும் புலமைப்பரிசில் பெறத் தகுதிபெறும் மாணவர்களுக்கு நிதி புலமைப்பரிசிலாக  ரூ. 20,000, ரூ. 40,000 மற்றும் ரூ. 50,000 தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளுக்கு முறையே  வழங்கப்படும். 

தேசியப் பரீட்சைகளில் சிறப்பாக சித்தியடையும்  ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ்  ஆயுள் காப்புறுதி ஒப்பந்ததாரர்களின் பிள்ளைகள் இந்த புலமைப்பரிசிலுக்கு  விண்ணப்பிக்கலாம். நிதி பபுலமைப்பரிசில்  பின்வருமாறு பல ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

 

பரீட்சை சுப பெத்தும் உதவித் தொகை ரூ. (வருடத்திற்கு) வருடங்கள்
தரம் 5 புலமைப்பரிசில் 20,000 5 வருடங்கள்
சாதாரண தரம் 40,000 2 வருடங்கள்
உயர்தரம் 50,000 3 வருடங்கள்