இது உங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் ஒரு காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் காப்புறுதியை வழங்கும் பிரத்தியேகமான ஒரு திட்டமாகும். இது ஊழியர்களுக்கு உயரளவிலான பாதுகாப்புணர்வினை வழங்குவதுடன், தமது வேலையிடத்துடன் அவர்களுக்கு ஒரு பிணைப்பையும் ஏற்படுத்துகின்றது. இக்காப்புறுதிப் பத்திரம் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது:
- ஆயுள் காப்புறுதி பாதுகாப்பு மற்றும் விபத்து மரணம் தொடர்பான அனுகூலங்கள்
- முழுமையான மற்றும் நிரந்தரமான உடல் இயலாமை ஏற்படும் சந்தர்ப்பத்தில் காப்புறுதிப் பாதுகாப்பு
- ஓரளவுக்கு நிரந்தர உடலியலாமை ஏற்படும் சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் அனுகூலங்கள் (ஒரு விபத்து நேரும் சந்தர்ப்பத்தில்)
- கடுமையான நோய்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
- இறுதிக் கிரியை செலவுகளுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
- மருத்துவமனை காசு அனுகூலங்கள்
Protect – ஊழியர் குழும ஆயுள் காப்புறுதிப் பத்திரம் மூன்று விசேட காப்புறுதித் திட்டங்களை வழங்குகின்றது. தொழில் தருநர்கள் ஆகக் குறைந்த தவணைக் கட்டணத்தின் அடிப்படையில் தமக்குப் பொருத்தமான திட்டத்தைத் தெரிவு செய்து கொள்ள முடியும். அதன் மூலம் தமது ஊழியர்களுக்கு உயர் பராமரிப்புடன் கூடிய அனைத்துமடங்கிய ஒரு காப்புறுதிப் பாதுகாப்பை வழங்கக் கூடிய வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கின்றது:
*நிபந்தனைகளுக்கு அமைவாக
அனைத்து ஊழியர்களுக்குமான பாதுகாப்பு
ஒரு காப்புறுதிப் பத்திரத்தின் கீழ் அனைத்து ஊழியர்களும் உள்ளடக்கப்படுவார்கள்
உயர் அளவிலான பாதுகாப்பு
குறைந்த தவணைக் கட்டணத்தில் உயரளவிலான பாதுகாப்பு
குறைந்தளவிலான ஆவணங்கள்
குறைந்தளவிலான ஆவணங்கள்
ஊழியர்களுக்குக் கிடைக்கும் அனுகூலங்கள்
இது தொழில்தருநரின் வணிகச் சின்னத்தின் மதிப்பை உயர்த்துவதுடன், ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், நிறுவனத்தின்பால் அவர்களுடைய கவர்ச்சியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றது
- காப்புறுதிப் பத்திரதாரர் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு கம்பனியாக/ நிறுவனமாக இருந்து வருதல் வேண்டும்.
- ஊழியர் குழும காப்புறுதிப் பத்திரம் ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்கப்பட வேண்டிய பத்திரமாகும்.
- இதில் உள்ளடக்கப்படும் குறைந்தபட்ச ஊழியர்கள்/ உறுப்பினர்கள் எண்ணிக்கை 25 க்குக் குறையாதிருத்தல் வேண்டும்.
- உறுப்பினர் ஒருவர் இதில் சேர்ந்து கொள்வதற்கான குறைந்த பட்ச வயது 18 வருடங்களாகும்.
- உறுப்பினர் 70 வயதையடையும் பொழுது இந்தக் காப்புறுதிப் பாதுகாப்பு முடிவுறுத்தப்படும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.





