இன்றைய கட்டுமான கைத்தொழில் துரித வேகத்தில் செயற்பட்டு வருவதுடன், பல தேவைகளையும் கொண்டுள்ளது. அதன் காரணமாக அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கும் இடர்களை புரிந்து கொண்டு கட்டடங்கள், பாலங்கள், வீதி அபிவிருத்தி மற்றும் அணைக்கட்டுக்கள் என்பவற்றை உள்ளடக்கிய கட்டட நிர்மாண கருத்திட்டங்களைப் பொறுப்பேற்கும் ஒப்பந்ததாரர்களுக்கு பொருந்தக் கூடிய விதத்தில் அனைத்துமடங்கிய காப்புறுதித் திட்டமொன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த காப்புறுதி பத்திரம் அவர்களுக்கான ஒரு பாதுகாப்பு வலையாக இருந்து வருவது மட்டுமன்றி, சிவில் கட்டுமான கருத்திட்டங்களுக்கான ஒப்பந்தம் சார்ந்த ஒரு தேவையாகவும் உள்ளது.
கட்டுமான வேலை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இடர்களுக்கான காப்புறுதி பாதுகாப்பு
- ஒப்பந்த விலை
- பொறித்தொகுதி மற்றும் இயந்திரங்கள்
- பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்
- இடிபாடுகளை அகற்றுதல்
- ஒப்பந்தத்தை வழங்கிய தரப்பின் தற்போதைய சொத்து
மூன்றாந் தரப்பு சட்டப் பொறுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணங்கள்
- உடல் ரீதியான காயம்
- சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்கள்
- அதிர்வு, அகற்றப்படுதல் அல்லது ஆதாரம் பலமிழத்தல்
- தரைக்கீழ் கேபிள்கள்
மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புக்கள்
- வேலை நிறுத்தம், கலவரம் மற்றும் உள்நாட்டுக் கிளர்ச்சி தொடர்பான பாதுகாப்பு
- பயங்கரவாதச் செயல்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
- காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.