இது 2005 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க வேலையாள் நட்ட ஈட்டுச் சட்டத்தின் கடைசி திருத்தத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் தொழில்தருநர்களின் பொறுப்புக்களை உள்ளடக்கும் விதத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு காப்புறுதித் திட்டமாகும். வேலையாட்கள் தமது தொழிலில் ஈடுபட்டிருக்கும் போது காயமடையும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கென இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேலையாட்கள் நட்ட ஈட்டுச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புக்களும்
வேலையாட்கள் நட்ட ஈட்டுச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டிருக்கும் அனைத்துப் பொறுப்புக்களும்
பொதுச் சட்டத்தின் கீழான சட்டப் பொறுப்பு
வேலையாள் ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு நட்ட ஈடு வழங்குவதற்கான சட்டப் பொறுப்பு
வேலையாளுக்கு தொழிலுடன் சம்பந்தப்பட்ட விதத்தில் ஏற்படக் கூடிய நோய்களுக்கு நட்ட ஈடு செலுத்துவதற்கான சட்டப் பொறுப்பு
சட்டத்தில் குறித்துரைக்கப்படாத பின்வரும் விடயங்களுக்கான மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்பு:
- கலவரங்கள் மற்றும் வேலை நிறுத்தங்களுக்கான பாதுகாப்பு
- பயங்கரவாதத்துக்கான காப்புறுதி பாதுகாப்பு
- பிரயாணக் காப்புறுதிப் பாதுகாப்பு - வீட்டிலிருந்து வேலைக்குச் செல்லல் மற்றும் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்புதல்
- கடமை நேரம் அல்லாத சந்தர்ப்பத்தில் ஏற்படும் தனிப்பட்ட விபத்துக்கான காப்புறுதி
- முழுச் சம்பளத்துக்கான காப்புறுதிப் பாதுகாப்பு - தற்காலிக உடல் இயலாமை ஏற்படும் சந்தர்ப்பங்களில் 30 நாட்களுக்கு மாத சம்பளத்தைச் செலுத்துதல். காப்புறுதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு செலுத்தப்பட வேண்டிய மாத சம்பளத்தின் உச்ச வரம்புக்கு அமைவாக (ஆகக் கூடியது 26 வாரங்களுக்கான கொடுப்பனவு; உச்ச வரம்புத் தொகை வாரமொன்றுக்கு ரூ. 5,500)
- இயற்கை மரணத்துக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
- தொழில் செய்யும் காலப் பிரிவின் போது தமது வேலையாட்களுக்கு மரணம் அல்லது காயம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் சட்ட ரீதியாக பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இருந்து வரும் அனைத்துத் தொழில்தருநர்களும்
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.