இந்தக் காப்புறுதித் திட்டம் இலங்கையின் தேயிலைத் துறையைச் சேர்ந்தவர்களின் காப்புறுதித் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் விதத்தில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அவற்றின் களஞ்சியங்கள் என்பவற்றையும் தேயிலைத் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள், கட்டடங்கள், கையிருப்புக்கள், இடம்பெற்று வரும் வேலைகள் என்பன எதிர்கொள்ளக் கூடிய இடர்நேர்வுகளையும் உள்ளடக்குகின்றது. இந்தக் காப்புறுதித் திட்டம் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருப்பதுடன், தமது தேவையின் பிரகாரம் தமக்குப் பொருத்தமான தெரிவை மேற்கொள்வதற்கு அதன் மூலம் காப்புறுதிப்பத்திரதாரருக்கு ஒரு விருப்பத் தெரிவு வழங்கப்படுகின்றது.
பிரிவு A: தீ மற்றும் இடி மின்னல் தாக்குதல், தீய நோக்கத்துடன் சேதம் விளைவித்தல், திடீர் வெடிப்பு, சூறாவளி, கடும் காற்று, கடும் வெப்பம், வெள்ளப்பெருக்கு, பூகம்பம், இயற்கை அனர்த்தங்கள், திருட்டு, வேலை நிறுத்தக் கலவரம், உள்நாட்டுக் கிளர்ச்சி ஆகியவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் இக்காப்புறுதி பாதுகாப்பு தீ விபத்து மற்றும் அவற்றோடு சம்பந்தப்பட்ட பல்வேறு அபாயங்களை உள்ளடக்குகின்றது. பயங்கரவாதமும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரிவு B: மேலதிக தவணைக் கட்டணத்தில் வழங்கப்படும் விருப்பத் தெரிவு காப்புறுதி பாதுகாப்புக்கள்
- நம்பிக்கை உத்தரவாத காப்புறுதி
- ஊழியர்களுக்கான தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி
- வேலையாட்களுக்கான நட்ட ஈட்டுக் காப்புறுதி
- தீ மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இடர்களினால் ஏற்படும் இடைஞ்சல் காரணமாக வேலைச் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பு
- தொழிற்சாலை இயந்திரங்கள் தொடர்பான இயந்திரம் பழுதடைதல் காப்புறுதிப் பாதுகாப்பு
- காசு காப்புறுதி (போக்குவரத்திலிருக்கும் காசு, பெட்டகங்கள் மற்றும் இழுப்பறைகளில் வைக்கப்பட்டிருக்கும் காசு)
- தேயிலைக் கையிருப்புகளைப் போக்குவரத்துச் செய்வது தொடர்பான போக்குவரத்திலுள்ள பண்டங்களுக்கான காப்புறுதி
- தகடு கண்ணாடி காப்புறுதி பாதுகாப்பு
- பெயர்ப் பலகை காப்புறுதி பாதுகாப்பு
- இலத்திரனியல் உபகரணங்கள் காப்புறுதி பாதுகாப்பு
- காசு காப்புறுதி
- மோட்டார் இயந்திரங்களுக்கு ஏற்படும் சேதங்கள்
பின்வரும் காப்புறுதி பாதுகாப்புக்கள் கட்டணங்கள் எவையுமின்றி வழங்கப்படுகின்றன:
- காப்புறுதி பத்திரதாரர் அல்லது நியமனம் செய்யப்பட்டவருக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி
- சட்டப் பொறுப்புக்கான காப்புறுதி
- இடிபாடுகளை அகற்றுதல்
- நில அளவையாளர்களுக்கான / ஆலோசகர்களுக்கான கட்டணம்
- காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.