கைத்தொழில் / வணிகப் பணிமனைகளின் தீக் காப்புறுதி உங்கள் கைத்தொழில்களுக்கு / வணிகப் பணிமனைகளுக்கு இழப்பு அல்லது சேதம் என்பவற்றின் போது உங்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கெனவே வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு காப்புறுதித் தீர்வு முறையாகும். இந்தக் காப்புறுதி பாதுகாப்பு வர்த்தகக் கட்டடங்கள், அலுவலகங்கள், உற்பத்தித் தொழிற்சாலைகள், களஞ்சியசாலைகள் மற்றும் பாடசாலைகள் என்பவற்றை தீ, களவு, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட இடர்கள் போன்ற வர்த்தக மற்றும் கைத்தொழில் அபாயங்களிலிருந்து பாதுகாப்பளிக்கின்றது. மேலும் அது உங்கள் பணிமனைக்கு எதிர்பாராத இழப்பு அல்லது சேதம் ஏற்படும் சந்தர்ப்பத்தில் ஆகக் குறைந்த தடங்கலுடன் அல்லது எவ்வித தடங்கலுமின்றி உங்கள் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதனையும் உறுதிப்படுத்துகின்றது. நீங்கள் பெற்றுக் கொள்ளும் காப்புறுதிப் பாதுகாப்பு அமைவிடம், கட்டுமானம் மற்றும் அதிலிருப்பவர்களின் எண்ணிக்கை போன்ற விடயங்களின் அடிப்படையில் மாறுபட முடியும்.
காப்புறுதிப் பாதுகாப்பு:
- • அடிப்படைக் காப்புறுதிப் பாதுகாப்பு தீ மற்றும் இடி, மின்னல் சேதங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுத் தருகின்றது.
மேலதிகத் தவணைக் கட்டணத்தில் பின்வரும் காப்புறுதிப் பாதுகாப்புக்கள் வழங்கப்படுகின்றன:
- கலவரம் மற்றும் வேலை நிறுத்தம்
- தீய நோக்கத்துடன் சேதம் விளைவித்தல்
- திடீர் வெடிப்பு
- விமானங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் சேதம்
- திடீர் தாக்கத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் சேதம்
- சூறாவளி/ கடுங்காற்று/ கடும் வெப்பம்/ வெள்ளப்பெருக்கு
- பூகம்பம் (தீ மற்றும் அதிர்ச்சி என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில்)
- தண்ணீர் தாங்கிகள் வெடித்தல் அல்லது மிகை நீர் வெளியேற்றம்
- மின்சார உபகரணங்கள் போன்றவை
- இயற்கை அனர்த்தப் பாதுகாப்பு
- பயங்கரவாதம்
- தன்னிச்சையாக ஏற்படும் எரிவு
- திருடர் பாதுகாப்பு
- காப்புறுதிப் பத்திரதாரர் சம்பந்தப்பட்ட சொத்தின் மீது காப்புறுதி பற்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதிதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கு தகுதி வாய்ந்தவராக இருந்து வருதல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படும் ஆதனம்/ சொத்துக்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.