இயங்கிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள், ஓய்வில் வைக்கப்பட்டிருக்கும் இயந்திரங்கள் அல்லது பராமரிப்பு வேலைகள் இடம்பெற்று வரும் இயந்திரங்கள் என்பவற்றுக்கு தாக்கமான காப்புறுதிப் பாதுகாப்பினை இது வழங்குகின்றது. இந்தத் திட்டம் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் பொருட்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மற்றும் திடீர் பௌதீக இழப்பு அல்லது சேதம் என்பவற்றுக்கு காப்புறுதிப் பாதுகாப்பினை வழங்குகின்றது. மேலும், அது அப்பொருட்களின் உடனடியான மற்றும் துரித பழுதுபார்ப்பு வேலைகள் மற்றும் / அல்லது புதிய பொருட்களை ஈடு செய்தல் என்பவற்றுக்கும் ஏற்பாடு செய்கின்றது. இந்தக் காப்புறுதிப் பத்திரத்துடன் இணைந்த விதத்தில் மிகவும் வலுவான அனைத்துமடங்கிய காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு கைத்தொழில்/ வணிக பணிமனைகளுக்கான தீ காப்புறுதியையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இயந்திரங்களின் மின்சார அல்லது இயந்திரவியல் செயலிழப்பு காரணமாக ஏற்படக் கூடிய இழப்பு அல்லது சேதம் என்பவற்றுக்கு இந்தக் காப்புறுதியின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படும்
- காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.