இப்பொழுது சில காலமாக சுற்றுலா கைத்தொழில் துறை குறிப்பான சில சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில் இலங்கையின் ஹோட்டல் உரிமையாளர்களுக்கென நாங்கள் அனைத்துமடங்கிய ஒரு காப்புறுதித் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். காப்புறுதித் துறையில் நாம் பெற்றுக் கொண்டிருக்கும் பல தசாப்த கால நிபுணத்துவத்தின் படிப்பினைகளை அடிப்படையாகக் கொண்டு, ஹோட்டல் உரிமையாளர்கள் வெளிக் காரணிகள் மற்றும் தாக்கங்கள் என்பவற்றை கருத்தில் கொண்டு தமது காப்புறுதிப் பத்திரங்களை ஒழுங்கான அடிப்படையில் மீளாய்வு செய்து, இற்றைப்படுத்த வேண்டிய தேவை இருந்து வருவதனை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம்.
கட்டுமானத் தொழில்துறை மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இடர்கள் என்பவற்றுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
பிரிவு A: தீ மற்றும் இடி மின்னல் தாக்குதல், தீய நோக்கத்துடன் சேதம் விளைவித்தல், திடீர் வெடிப்பு, சூறாவளி, கடும் காற்று, கடும் வெப்பம், வெள்ளப்பெருக்கு, பூகம்பம், இயற்கை அனர்த்தங்கள், திருட்டு, வேலை நிறுத்தக் கலவரம், உள்நாட்டுக் கிளர்ச்சி ஆகியவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் இக்காப்புறுதி பாதுகாப்பு தீ விபத்து மற்றும் அவற்றோடு சம்பந்தப்பட்ட பல்வேறு அபாயங்களை உள்ளடக்குகின்றது. பயங்கரவாதத்துக்கான காப்புறுதி பாதுகாப்பையும் இது உள்ளடக்குகின்றது
மேலதிக காப்புறுதிப் பாதுகாப்பு
வேலை நிறுத்தம், கலவரம், உள்நாட்டுக் கிளர்ச்சி என்பவற்றுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத செயல்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
மூன்றாந் தரப்பு சட்டப் பொறுப்பு மற்றும் சம்பந்தப்பட்ட இடர்களுக்கான காப்புறுதி
பிரிவு B: மேலதிக தவணைக் கட்டணத்தில் வழங்கப்படும் விருப்பத் தெரிவு காப்புறுதி பாதுகாப்புக்கள்
- நம்பிக்கை உத்தரவாத காப்புறுதி
- ஊழியர்களுக்கான தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி
- வேலையாட்களுக்கான நட்ட ஈட்டுக் காப்புறுதி
- தீ மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இடர்களினால் ஏற்படும் இடைஞ்சல் காரணமாக வேலைச் செலவுகளில் ஏற்படும் அதிகரிப்பு
- இயந்திரங்களுக்கான இயந்திரம் பழுதடைதல் காப்புறுதி பாதுகாப்பு
- காசுக் காப்புறுதி (போக்குவரத்திலிருக்கும் காசு, பெட்டகங்கள் மற்றும் இழுப்பறைகளில் வைக்கப்பட்டிருக்கும் காசு)
- தகடு கண்ணாடி காப்புறுதி பாதுகாப்பு
- பெயர்ப் பலகைகள் காப்புறுதி பாதுகாப்பு
- மின்னணு உபகரணங்களுக்கான காப்புறுதி பாதுகாப்பு
- காசு காப்புறுதி பாதுகாப்பு
- காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.