பரந்த வீச்சிலான கைத்தொழில்கள் மற்றும் வணிகங்கள் என்பவற்றில் செயற்பட்டுவரும் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விதத்தில் சேவைகளை வழங்கும் பொருட்டு புறம்பான காப்புறுதிப் பாதுகாப்புக்கள் அவசியமான விசேட துறைகளை நாங்கள் இனங் கண்டுள்ளோம். இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் பொருத்துக்கள் கட்டடங்களை எழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடர்நேர்வு காப்புறுதிக் கொள்கையின் மூலம் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்கின்றன.
கட்டடங்களை எழுப்பும் செலவு
கப்பல் வாடகை, சுங்கத் தீர்வைகள் மற்றும் அறவீடுகள்
சிவில் பொறியியல் வேலை
காப்புறுதிப் பத்திரதாரரின் தற்போதைய ஆதனத்திலிருந்து இடிபாடுகளை அகற்றுதல்
மூன்றாந் தரப்பு சட்டப் பொறுப்பு
- காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.