இந்த தனிப்பட்ட விபத்து காப்புறுதித் திட்டம் வன்முறை, விபத்து அல்லது ஏனைய வெளிக் காரணிகள் மற்றும் பார்வைக்கு புலப்படக் கூடிய முறைகள் என்பவற்றினால் ஏற்படுத்தப்படும் மரணம் அல்லது உடல் ரீதியான காயங்கள் என்பவற்றுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கான அனைத்துமடங்கிய ஒரு காப்புறுதித் திட்டமாகும். அத்தகைய எதிர்பாராத விபத்துக்கள் காரணமாக ஏற்படும் சிரமங்களிலிருந்து அது காப்புறுதிப் பத்திரதாரர்களுக்குப் பாதுகாப்பளிக்கின்றது.
.
விபத்து மரண காப்புறுதி
உடலியலாமைக் காப்புறுதிகள்
விபத்து காரணமாக நிரந்தர முழுமையான உடல் இயலாமை மற்றும் நிரந்தர ஓரளவு உடல் இயலாமை என்பன ஏற்படும் சந்தர்ப்பங்களில் காப்புறுதிப் பாதுகாப்பு
மேலதிகப் பாதுகாப்புகள்
ஓரளவு/ தற்காலிக உடல் இயலாமையின் போது மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்பு
மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புகள்
உயரளவிலான பாதுகாப்பு மற்றும் மேலதிக அனுகூலங்கள் என்பவற்றுடன் இணைந்த விதத்தில் மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புகளுடன் இதனை விரிவாக்கிக் கொள்ள முடியும்
- 18 வயது தொடக்கம் 65 வயது வரையிலான வயது வந்தவர்கள் தனிப்பட்ட விபத்துக் காப்புறுதியைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமையைக் கொண்டுள்ளார்கள்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.