கப்பற் சரக்குக் காப்புறுதி

கப்பற் சரக்குக் காப்புறுதி

கப்பற் சரக்குக் காப்புறுதி பத்திரதாரர்களின் சொத்துக்கள்/ கப்பற் சரக்குகள் எடுத்துச் செல்லும் பொழுது ஏற்படக்கூடிய சம்பந்தப்பட்ட இடர்நேர்வுகளிலிருந்து தோன்றும் இழப்புக்கள், சேதங்கள் என்பவற்றுக்கெதிராக காப்புறுதி வழங்கப்படும். இந்தக் காப்புறுதித் திட்டம் விசேடமாக ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர் ஆகியோர் நிறைவேற்றி வைக்க வேண்டியிருக்கும் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்காப்புறுதி பாதுகாப்பின் நியதிகள் பின்வருவனவற்றைப் பொருத்து அமையும்:

  • பண்டம்
  • பொதிப்படுத்தல்
  • கப்பலின் வகை மற்றும் சேதமடையக் கூடிய அதன் இயல்பு
  • கடற் பயணம்
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
கப்பற் சரக்கு உறுப்புரை (A) - விலக்குகளுக்கு அமைவாக

கப்பற் சரக்கு நிறுவன உறுப்புரை (A) இன் கீழ் இழப்பு அல்லது சேதங்கள் தொடர்பான அனைத்து இடர்நேர்வுகளும் – விலக்குகளுக்கு அமைவாக

கப்பற் சரக்கு நிறுவன உறுப்புரைகள் (B) அல்லது (C) என்பவற்றின் காப்புறுதிப் பாதுகாப்பு

கப்பற் சரக்கு உறுப்புரை (B) அல்லது (C) என்பவற்றின் கீழ் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் இடர்களுக்கான பாதுகாப்புகள்

நட்டத்துக்கான காப்புறுதி பாதுகாப்பு

மொத்த நட்டத்துக்கான காப்புறுதிப் பாதுகாப்பு

விரும்பப்படும் காப்புறுதிப் பாதுகாப்பு

விரும்பப்படும் காப்புறுதிப் பாதுகாப்பினை வழங்குவது தொடர்பான காப்புறுதி ஏற்பாளரின் உடன்பாடு

விரிவான காப்புறுதிப் பாதுகாப்பு

மேலதிக தவணைக் கட்டணமொன்றைச் செலுத்துவதன் மூலம் போர், வேலை நிறுத்தங்கள், கலவரங்கள் மற்றும் உள்நாட்டுக் கிளர்ச்சிகள் என்பவற்றால் ஏற்படக் கூடிய இடர்கள் பயங்கரவாதம், மாற்றிக் கப்பலேற்றுதல் மற்றும் களஞ்சியப்படுத்தல் தொடர்பாக ஏற்படக் கூடிய நிகழ்வுகள் என்பவற்றுக்கெதிராக காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்

உள்நாட்டில் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான பாதுகாப்பு

விரும்பப்படும் செல்லிடத்துக்கு உள்ளூரில் பொருட்களை எடுத்துச் செல்லும் போது வழங்கப்படும் காப்புறுதி பாதுகாப்பு

 

உள்ளூர் போக்கவரத்து சேவையாளர்களின் தேவைகளை நிறைவு செய்து வைக்கின்றது

நாட்டிற்குள் பண்டங்களைப் போக்குவரத்துச் செய்வதில் ஈடுபட்டிருக்கும் உள்நாட்டு போக்குவரத்துச் சேவையாளர்களுக்கு பண்டங்களுக்கு தற்செயலாக ஏற்படும் சேதங்களுக்குக் காப்புறுதி வழங்கப்படுகின்றது. இது ஏற்றி இறக்கும் செயற்பாடுகளின் போது எதிர்கொள்ள நேரிடும் இடர்நேர்வுகளையும் உள்ளடக்குகின்றது

பாரிய அளவிலான சரக்குகளுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு

பாரிய அளவிலான சரக்குகளுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு (உதாரணம்: தேயிலை மற்றும் தைத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு)

பாரியளவிலான இறக்குமதியாளர்கள் / ஏற்றுமதியாளர்கள் ஆகியோருக்கான விசேட வசதி

பாரியளவிலான இறக்குமதியாளர்கள்/ ஏற்றுமதியாளர்கள் எமது e-marine முறைக்கூடாக தமது வாசற்படியிலேயே கப்பற் சரக்குக் காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி

தகைமை
  • காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • ஒப்படைக்கப்படும் சரக்குகள் கடற் போக்குவரத்துக்கென சட்ட ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்க பண்டங்களாக இருந்து வருதல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்