மோட்டார் வாகனத் தொகுதிக்கான காப்புறுதித் தீர்வுகள்

மோட்டார் வாகனத் தொகுதிக்கான காப்புறுதி தீர்வுகள் என்றால் என்ன?

கம்பனிகளுக்குச் சொந்தமான வாகனத் தொகுதிகளுக்கு விபத்து இடர்நேர்வுகள் மற்றும் சேதங்கள் என்பவற்றின் போது காப்புறுதிப் பாதுகாப்பினை வழங்கும் அனைத்துமடங்கிய கட்டுபடியாகக் கூடிய ஒரு காப்புறுதித் திட்டமாக இது இருந்து வருகிறது. மோட்டார் வாகனத் தொகுதிக்கான தீர்வுகளை வழங்கும் காப்புறுதிப் பத்திரம் உங்கள் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் முதலீடு என்பவற்றை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் வாகனத் தொகுதியின் சேவை மற்றும் செயற்படும் விதம் என்பவற்றுக்குத் தனித்துவமான விதத்தில் அந்தந்த நிறுவனங்களுக்குப் பொருந்தக் கூடிய காப்புறுதித் திட்டங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
வாகனத் தொகுதியில் உள்ளடக்கப்பட்டிருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் விசேட காப்புறுதித் தவணைக் கட்டணங்கள்
துல்லியமான தீர்ப்பனவுகள்

மொத்த காப்புறுதிக் கோரிக்கைத் தொகையையும் துல்லியமாகத் தீர்த்து வைத்தல்

Motor Plus Royalty வெகுமதி நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்ந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு

நன்கு பிரபல்யம் பெற்ற வணிகச் சின்னங்கள் மற்றும் இலங்கையின் கம்பனிகள் என்பவற்றிலிருந்து அற்புதமான வெகுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புடன் இணைந்த விதத்தில் மோட்டார் ப்ளஸ் லோயல்டி வெகுமதித் திட்டத்தில் சேர்ந்து கொள்ள முடியும்

அந்தந்த இடத்தில் மேற்கொள்ளப்படும் பரீட்சிப்பு

விபத்துக்கள் காரணமாக வாகனங்கள் சேதமடைந்திருக்கும் பொழுது, தொழில்சார் ரீதியில் தகைமை வாய்ந்த 175 க்கும் மேற்பட்ட எமது தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அந்தந்த இடத்துக்கு உடனடியாக விஜயம் செய்து விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு, விபத்தின் மூலம் ஏற்பட்டிருக்கும் சேதத்தை மதிப்பிடுகிறார்கள். பழுதுபார்ப்பு வேலைகளுக்கு அனுமதி வழங்குவதற்கென அவர்கள் எந்தவொரு இடத்துக்கும், எந்தவொரு நேரத்திலும் செல்வதற்கு தயாராக இருந்து வருகின்றார்கள்

மூன்று வேலை மணித்தியாலங்களுக்குள் காப்புறுதிக் கோரிக்கைத் தொகைகளுக்குப் பணம் செலுத்துதல்

ரூ. 75,000 க்குக் குறைந்த காப்புறுதிக் கோரிக்கைகளுக்கு பழுது பார்ப்பு செலவு மதிப்பீடு, பழுது பார்ப்பு கட்டண பட்டியல்கள், மீட்பு மற்றும் ஊழியச் செலவு, பழுது பார்ப்புக்கு பின்னரான பரீட்சிப்பு என்பன இல்லாத விதத்தில் மூன்று வேலை மணித்தியாலங்களுக்குள் செலவுத் தொகை ஈடு செய்யப்படுகின்றது

ஆவணங்கள் இல்லாத விதத்தில் வாகனங்களைப் பழுதுபார்த்தல்

பழுதுபார்ப்பு கட்டணப் பட்டியல்கள் மற்றும் மீட்புச் செலவுப் பட்டியல்கள் என்பன இல்லாத விதத்தில் ரூ. 75,000 - 500,000 வரையிலான கோரிக்கைகள் தொடர்பாக உங்கள் வாகனத்தின் பழுதுபார்ப்பு வேலைகளை செய்வித்துக் கொள்ளுங்கள்

காசு சாராத பழுது பார்ப்பு வசதி

அங்கீகரிக்கப்பட்ட முகவர்களால் வழங்கப்படும் காசு சாராத பழுதுபார்ப்பு வசதி வாகனத்தின் தயாரிப்பு திகதியிலிருந்து 5 வருடங்கள் வரையில் வழங்கப்படுகின்றது. உரிமையாளரின் கணக்கிலிருந்து அதற்கு பிடித்தங்கள் செய்யப்பட மாட்டாது

இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பங்காளர் கராஜ்களிலிருந்து பயன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் மோட்டார் ப்ளஸ் பங்காளர் கராஜ்களில் உங்கள் வாகனங்களைப் பழுதுபார்த்து பின்வரும் அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்:

  • காசு சாராத தீர்ப்பனவு வசதி
  • வாகனத்தின் வயது என்னவாக இருந்தாலும் உங்கள் காப்புறுதிக் கோரிக்கையிலிருந்து உரிமையாளரின் கணக்கில் பங்களிப்புத் தொகை பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
  • ஆகக் கூடியது 10 நாட்களுக்கு வாகன வாடகை அலவன்ஸ்
Motor Plus திட்டம் பங்காளர் கராஜ்கள்
பெயர் முகவரி தொடர்பு இலக்கம்
கிரியேட்டிவ் ஒட்டோ ஷைன் கலகெடிஹேன 332 289873 / 779 406799
ஆர்.எம். மோட்டர்  வேர்க்ஸ் முதுன்கொட 332 222867
சிலோன் மோட்டர்  வேர்க்ஸ்  சேர்விசஸ்  (பிரைவேட்) லிமிடட் களனி 112 917207 / 777 387300
மெர்க்கன்டைல் இன்வெஸ்ட்மன்ட் பினான்ஸ்  (பிரைவெட்) லிமிடட் கொஹூவலை 112 852327 / 114 899860
அஜித் மோட்டர்ஸ் ஹோகந்தர தெற்கு 112 760446 / 112 185446 / 777 890844
களிந்து ஒட்டோ ரிபெயார் சென்டர் (பிரைவட்) லிமிடட் யக்கல 332 230885 / 777 578708
கென்டாரோ ஒட்டோ என்ஜினியரிங் பெப்பிலியான 112 890676 / 112 890677
க்விக் பிக்ஸ் ஒட்டோமொபைல்ஸ் (பிரைவட்) லிமிடட் அம்பத்தலே 112 549606

 

மேலதிகத் தவணைக் கட்டணங்களை செலுத்துவதன் மூலம் பின்வரும் காப்புறுதிப் பாதுகாப்புக்களுக்கும் இதனை விரிவாக்கிக் கொள்ள முடியும்
  • காப்புறுதிப் பத்திரதாரர்/ சம்பளம் பெறும் சாரதி/ பயணிகள் ஆகியோருக்கான தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி
  • வாடகைக்கமர்த்தல்/ வாடகைக் காப்புறுதிப் பாதுகாப்பு
  • பயணிகளுக்கான சட்ட ரீதியான பொறுப்பு தொடர்பான காப்புறுதிப் பாதுகாப்பு
  • போக்குவரத்துச் செய்யப்படும் பண்டங்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
  • வாகனங்களை இழுத்துச் செல்வதற்கான உயர் கட்டணங்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
  • பயிலுனர் சாரதி/ பயணிப்பவர் காப்புறுதிப் பாதுகாப்பு
  • சாரதி பயிற்சி காப்புறுதிப் பாதுகாப்பு
  • சாரதிக்கான வேலையாள் நட்ட ஈட்டுக் காப்புறுதிப் பாதுகாப்பு
  • வாகன முகப்புக் கண்ணாடிக்கான விசேட பாதுகாப்பு
  • வேலை நிறுத்தம், கலவரங்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கான பாதுகாப்பு
  • பயங்கரவாதத்துக்கான காப்புறுதிப் பாதுகாப்பு
தகைமை
  • நிறுவனம்/ கம்பனி வாகனத்தின் மீதான ஒரு காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • நிறுவனம்/ கம்பனி இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் வாகனம்/ வாகனங்கள் இலங்கையின் பூகோள எல்லைக்குள் இருந்து வருதல் வேண்டும்.

* விதிகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.

என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்