கப்பலின் சரக்கேற்றும் பாகம் மற்றும் இயந்திர காப்புறுதி

கப்பலின் சரக்கேற்றும் பாகம் மற்றும் இயந்திர காப்புறுதி

எமது கப்பற் சரக்குக் காப்புறுதிப் பத்திரம் சமுத்திரத்தில் பயணிக்கும் கப்பல்களின் சரக்கேற்றும் பாகம் மற்றும் இயந்திரம் என்பவற்றுக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்குகின்றது. கடலில் பயணிக்கும் பொழுது பின்வரும் அபாயங்களிலிருந்து அவற்றுக்கு ஏற்படக் கூடிய சேதங்களுக்கு எதிராக இந்தக் காப்புறுதி பாதுகாப்பு வழங்கப்படுகின்றது:

 • தீ
 • வெடிப்புக்கள்
 • வெளியார் திருட்டு
 • நங்கூரமிடுதல்
 • பூகம்பம், எரிமலை வெடிப்புக்கள் அல்லது மின்னல் தாக்குதல்
 • கொதிகலன்கள் வெடித்தல், அடித்தண்டுப் பகுதியில் ஏற்படும் முறிவு அல்லது கப்பலின் சரக்கேற்றும் பகுதியில் மற்றும் அல்லது இயந்திரங்களில் இருக்கும் வெளியில் தெரியாத ஒரு குறைபாடு
 • சரக்குகளை / எரிபொருளை ஏற்றும் பொழுது இறக்கும் பொழுது அல்லது மற்றொரு கப்பலுக்கு மாற்றும் பொழுது ஏற்படும் விபத்துக்கள்
 • கப்பல் அதிகாரிகள், சிப்பந்திகள் மற்றும் கப்பலோட்டிகள் தரப்பில் இடம்பெறும் கவனயீனம்
 • மேலதிக தவணைக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் போர், வேலை நிறுத்தங்கள், கலவரங்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாதம் என்பவற்றின் தாக்கங்களுக்கெதிராக காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

 

கப்பல் சரக்கேற்றும் பாகம் மற்றும் இயந்திர காப்புறுதி வகைகள்
 • இயக்குதல் காப்புறுதிப் பாதுகாப்பு - மொத்த நட்டம் அல்லது பகுதி நட்டம்
 • கடல் பயண காப்புறுதிப் பாதுகாப்பு - மொத்த நட்டம் அல்லது ஒரு பகுதி நட்டம்
 • கப்பல் கட்டுபவர்களுக்கு ஏற்படக் கூடிய இடர்நேர்வுகள்
 • கப்பல்களை பழுதுபார்ப்பவரின் சட்டப் பொறுப்புக்கள்
 • பாதுகாப்பு மற்றும் நட்டோத்தரவாத பொறுப்பு
 • உல்லாச கப்பல் சேவை காப்புறுதி பாதுகாப்பு

 

கப்பற் சரக்குகளை அனுப்பி வைப்பவர்களின் சட்டரீதியான பொறுப்பு

ஒவ்வொரு சட்டரீதியான பொறுப்பின் கீழுமுள்ள விடயங்கள் தொடர்பான விபரணம் வருமாறு:

1. கப்பற் சரக்கு சட்டப் பொறுப்பு காப்புறுதி

பின்வரும் விடயங்கள் தொடர்பாக கப்பற் சரக்குகளை அனுப்பி வைப்பவரின் சட்ட ரீதியான பொறுப்பு:

 1. கப்பற் சரக்குகளுக்கு ஏற்படக் கூடிய பௌதீக இழப்பு அல்லது பௌதீக சேதம், விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைவாக
 2. மேலே குறிப்பிடப்பட்டவற்றின் பின்விளைவாக ஏற்படக் கூடிய நட்டம்
 3. விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றுக்கு அமைவாக, பொதுச் சராசரி மற்றும் மீட்பு விடயத்துக்கான கப்பற் சரக்கின் பங்களிப்பு
2. மூன்றாம் தரப்பு சட்டரீதியான பொறுப்புக் காப்புறுதி

பின்வரும் விடயங்கள் தொடர்பாக ஏற்படக் கூடிய கவனயீனம் காரணமாக மூன்றாம் தரப்பிற்கு காப்புறுதியை வழங்கும் சட்ட பொறுப்பினை இது கொண்டுள்ளது.

 1. உடல் ரீதியான காயம்
 2. பௌதீக இழப்பு அல்லது பௌதீக சேதம்
 3. காப்புறுதிக் கோரிக்கை காரணமாக மூன்றாம் தரப்பொன்றுக்கு நேரடியாக பின்விளைவு சார்ந்த இழப்பு
3. காப்புறுதிக் கோரிக்கை செலவுகள்

முன்வைக்கப்படும் காப்புறுதிக் கோரிக்கை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள், சீராக்கம், மேன்முறையீடு அல்லது எதிர்வாதம் என்பவற்றுக்கு ஏற்படும் செலவுகளை கோரிப் பெறல். காப்புறுதி நிறுவனத்தின் முன்னனுமதியைப் பெற்றிருக்கும் நிலையில் இவற்றை மீளப் பெற்றுக் கொள்ள முடியும்.

4. தொழில்வாண்மையாளர் நட்டோத்தரவாத காப்புறுதி விரிவாக்கம்

மேலேயுள்ள காப்புறுதி பாதுகாப்பு காப்புறுதி செய்யப்பட்டவரின் தரப்பில் ஏற்படக் கூடிய கவனயீனத் தவறுகள் மற்றும் விடுபாடுகள் என்பவற்றுக்கான சட்டப் பொறுப்பையும் உள்ளடக்குகின்றது.

 1. கப்பற் சரக்குகளைப் பிழையான விதத்தில் அல்லது தவறான இடத்தில் ஒப்படைத்தல்
 2. சரக்குகளைக் கையாள்வதில் ஏற்படும் தாமதம்
 3. காப்புறுதி செய்யப்பட்டிருப்பவரின் ஒப்பந்த ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றி வைக்க முடியாமை
5. அபராதங்கள் மற்றும் தீர்வைகளுக்கான சட்டப் பொறுப்புக்கு காப்புறுதி செய்ய முடியும்

காப்புறுதி செய்யப்பட்டவர் அல்லது ஏனைய ஆட்கள் காப்புறுதி செய்யப்பட்டவர்களின் சார்பில் தமது அதிகாரத்திற்குள் செயற்படும் பொழுது நினையாப் பிரகாரமாக ஏதேனும் சட்ட ஒழுங்கு விதி அல்லது நியதிச் சட்டத்தின் ஏற்பாடு மீறப்படுவதன் விளைவாக அரசு அமைப்புக்களினால் அபராதங்கள், சுங்கத் தீர்வைகள், விற்பனை வரி, சுங்க வரி, பெறுமதிசேர் வரி அல்லது அத்தகைய அரசிறைக் கட்டணங்கள் அல்லது ஏனைய அபராதங்கள் விதிக்கப்பட முடியும். அத்தகைய மீறல்கள் பின்வருவனவற்றுடன் சம்பந்தப்பட்டிருத்தல் வேண்டும்:

 1. கப்பல் சரக்கு இறக்குமதி அல்லது ஏற்றுமதி அல்லது ஏற்றிச் செல்லும் கப்பல் காப்புறுதி செய்திருப்பவருக்கு உரித்தானதாக அல்லது அவர் குத்தகைக்குப் பெற்றதாக இருந்து வரக்கூடாது; அல்லது
 2. குடிவரவு;
 3. சுற்றாடல் மாசடைதல்;
 4. வேலை நிலைமைகளின் பாதுகாப்பு
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
பன்முக தெரிவுகள்

பகுதி நட்டம், முழு நட்டம் அல்லது ஆக்க பூர்வமான மொத்த நட்டம் என்பவற்றுக்கென காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்

மீன்பிடிப் படகுகள் தொடர்பான மொத்த நட்ட பாதுகாப்பு

மீன்பிடிப் படகுகள் தொடர்பான மொத்த நட்ட பாதுகாப்பு

ரீபர் மற்றும் பொது கப்பற் சரக்குக் கன்டைனர்களுக்கு காப்புறுதி வழங்கப்படுகின்றது

ரீபர் மற்றும் பொது கப்பற் சரக்குக் கன்டைனர்களுக்கு காப்புறுதி வழங்கப்படுகின்றது (நிறுத்தி வைக்குமிடம் தொடர்பான காப்புறுதிப் பாதுகாப்பு மட்டும்)

தகைமை
 • காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 • குறிப்பிட்ட கப்பல் கப்பற் சரக்குகளை எடுத்துச் செல்லும் நோக்கத்திற்கு/ கப்பற் பயணத்திற்குப் பொருத்தமானதாக இருந்து வருவதுடன் நல்ல நிலையிலும் இருந்து வருதல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்