மின்னணு உபகரண காப்புறுதி

மின்னணு உபகரண காப்புறுதி

இன்றைய அதிவேக வணிக உலகில் தன்னியக்கச் செயற்பாடு என்பது உங்கள் முன்னேற்றத்தை உத்தரவாதப்படுத்தும் ஒரு தேவையாக இருந்து வருகிறது. நாங்கள் இதனை கவனம் செலுத்த வேண்டிய ஒரு முதன்மை துறையாக அடையாளம் கண்டிருப்பதுடன், உங்கள் மின்னணு மற்றும் மின்சார உபகரணங்கள், கருவிகள் என்பவற்றுக்குத் தீங்கிழைக்கக் கூடிய அபாயங்களுக்கு எதிராக உங்கள் வணிக முயற்சிகளுக்குப் பாதுகாப்பளிக்கக் கூடிய ஒரு காப்புறுதி திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

 

காப்புறுதிப் பாதுகாப்பு கிடைக்கும் பொருட்கள்

 • மின்னணு தரவு முறைப்படுத்தல் உபகரணங்கள்
 • மருத்துவ நோக்கங்களுக்கென பயன்படுத்தப்படும் மின்னணு மற்றும் கதிர்வீச்சு உபகரணங்கள்
 • தொடர்பாடல் உபகரணங்கள்
 • நானாவித உபகரணங்கள்
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
அனைத்துமடங்கிய இந்த காப்புறுதிப் பத்திரம் பின்வரும் அபாயங்களிலிருந்து உங்கள் மின்சார மற்றும் மின்னணு உபகரணங்களுக்குப் பாதுகாப்பினை வழங்குகின்றது:

 

 • தீ மற்றும் இடி, மின்னல் தாக்குதல்
 • வெடிப்புக்கள் காரணமாக ஏற்படும் சேதம் அல்லது இழப்பு
 • விமானங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் சேதம்
 • புகை மாசாக்கல் தாக்கம்
 • தண்ணீர் மற்றும் ஈரப்பதன் சம்பந்தப்பட்ட சேதங்கள்
 • மின் கசிவு மற்றும் ஏனைய மின்சாரக் கோளாறுகள்
 • வடிவமைப்பு, தயாரிப்பு, ஒன்று சேர்ப்பு மற்றும் கட்டுமானத் தவறுகள்
 • குறைபாடுகளுடன் கூடிய இயக்குதல் மற்றும் தொழிலாளர்கள் வேண்டுமென்றே செய்யும் காரியங்கள்
 • திருட்டு/ களவு

 

தகைமை
 • காப்புறுதி பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 • காப்புறுதி செய்யப்படும் சொத்து/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்