வருடாந்த மருத்துவத் திட்டம் (Annual Medical Plan)

வருடாந்த மருத்துவத் திட்டம் என்றால் என்ன?

மிகவும் குறைந்த விலையில் பல்வேரு சுகாதார காப்புறுதித் தேவைகளை உள்ளடக்கியுள்ளது , உங்கள் நிதி முதலீட்டின் அடிப்படையில் 5 திட்டங்களிலிருந்து உங்களுக்கு மிகவும் பொருத்தமான வருடாந்த மருத்துவத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இது ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க சுகாதார காப்புறுதி திட்டமாகும் , இது மிகவும் சாதகமான 'நோ க்ளைம் போனஸ்' உடன் வருகிறது, இது ஒவ்வொரு உரிமைக்கோரிக்கை  இல்லாத வருடத்திற்கும் மருத்துவ  காப்புறுதி தொகையை 5% முதல் அதிகபட்சம் 50% வரை அதிகரிக்கிறது.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
கோரிக்கைகளை முன்வைக்காமைக்கான போனஸ் (No Claim Bonus) கொடுப்பனவு

உத்தரவாதப்படுத்தப்பட்ட அடிப்படைத் தொகை 5% இலிருந்து உச்ச மட்டம் 50% வரையில் அதிகரிக்கும் விதத்தில் கோரிக்கைகள் முன்வைக்கப்படாத ஒவ்வொரு வருடம் தொடர்பாகவும் போனஸ் கொடுப்பனவு வழங்கப்படும்

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது கிடைக்கும் அனுகூலங்கள்

தனியார் மருத்துவமனைகள் தொடர்பாக அறைக் கட்டணங்கள், மருத்துவர்களுக்கான கட்டணங்கள், அறுவை சிகிச்சை கூடங்களுக்கான கட்டணங்கள், நோயாளர் காவு வண்டி கட்டணங்கள், பிரசவ பயன்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய அனுகூலங்கள்

மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் போது கிடைக்கும் அனுகூலங்கள்

மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் போது கிடைக்கும் அனுகூலங்கள் நாளாந்த அலவன்ஸ் கொடுப்பனவு, மருந்துகளுக்கான செலவுகள் மற்றும் அரசாங்க ஆஸ்பத்திரிகள் தொடர்பான பிரசவ பயன்கள் என்பவற்றையும் உள்ளடக்குகின்றன

மேலதிக அனுகூலங்கள்

கண்புரை சத்திர சிகிச்சை, குடலிறக்க சத்திர சிகிச்சை (Hernia), கருப்பையை அகற்றுதல், அனைத்து வகையான இருதய சத்திர சிகிச்சைகள், புற்று நோய் சிகிச்சை மற்றும் ஏனைய பல சிகிச்சைகள் என்பவற்றுக்கு இவ்வனுகூலங்கள் பிரயோகிக்கப்படும்

அறுவைச் சிகிச்சை செலவுகள்

நாளாந்த பராமரிப்பு அறுவைச் சிகிச்சைச் செலவுகள்

தானம் செய்பவர்களுக்கான செலவுகள்

உடலுறுப்புக்களை தானம் செய்பவர்களுக்கான செலவுகள்

30 நாட்களில் ஈட்டுத்தொகை கோரிக்கையை முன்வைப்பதற்கான உரித்து

காப்புறுதிப் பத்திரம் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் ஈட்டுத்தொகை கோரிக்கையை முன்வைப்பதற்கான உரித்து கிடைக்கின்றது

தகைமை
  • காப்புறுதிப் பாதுகாப்பு 69 வயதில் முடிவடையும் விதத்தில் 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
  • காப்புறுதிப் பாதுகாப்பு 21 வயதில் முடிவடையும் விதத்தில் 180 நாட்கள் தொடக்கம் 17 வருடங்கள் வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்