வீட்டுப் பாதுகாப்பு லைட் திட்டம் (Home Protect Lite)

வீட்டுப் பாதுகாப்பு லைட் திட்டம் என்றால் என்ன?

தீ காப்புறுதி மற்றும் திருட்டு காப்புறுதி என்பவற்றை ஒன்றாக இணைத்து Home Protect Lite என்ற திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளோம். வீட்டுக் காப்புறுதி தொடர்பான இரண்டு தீர்வுகளை நீங்கள் உடனடியாகக் கரும பீடத்தில் கொள்வனவு செய்ய முடியும்.

 

விதிகள் மற்றும் நிபந்தனைகள்

  • சம்பந்தப்பட்ட கட்டடம் பிரத்தியேகமாக ஒரு தனியார் வசிப்பிடமாக/ வீடாகப் பயன்படுத்தப்படுதல் வேண்டும். அது ஏனைய நோக்கங்களுக்காக அல்லது வீட்டு கைத்தொழில்களுக்காக பயன்படுத்தக்கூடாது.
  • குறிப்பிட்ட கட்டடம் திருட்டுக்கு எதிரான காப்புறுதியைப் பெற்றுக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • குறிப்பிட்ட கட்டடம் நன்றாகப் பழுது பார்த்த நிலையில் இருந்து வருதல் வேண்டும்.
  • கட்டுமானச் சுவர்கள் செங்கற்கள்/ கொங்கிரீட்/ சீமெந்துக் கற்கள் என்பவற்றினால் நிர்மாணிக்கப்பட்டிருப்பதுடன், கூரையிடப்பட்டதாகவும் இருந்து வருதல் வேண்டும்.
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
பிரதான தீர்வுகள்:

காப்புறுதிப் பத்திர தீர்வு 2 பிரதான உள்ளம்சங்களைக் கொண்டுள்ளது. கட்டடத்துக்குள் உச்ச மட்டத்தில் ஏற்பட முடியுமென கருதும் சேதத்தின் அடிப்படையில் நீங்கள் அவற்றைத் தெரிவு செய்து கொள்ள முடியும்:

 

  • விருப்பத் தெரிவு 1: ஆகக் கூடிய சேதம் 1,000,000 என்ற அடிப்படையில் காப்புறுதித் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விருப்பத் தெரிவு 2:  ஆகக் கூடிய சேதம் 3,000,000 என்ற அடிப்படையில் காப்புறுதித் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முக்கியமான அம்சங்கள்:
  • ஈட்டுத் தொகை கோரிக்கைகளை இலகுவாகக் கோரிப் பெற்றுக் கொள்ள கூடிய வசதி
  • காப்புறுதியின் தொடக்கத்தில் காப்புறுதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலைப் பிரகடனப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
  • உடனடியாகக் காப்புறுதிப் பத்திரத்தை கொள்வனவு செய்யக் கூடிய வசதி
  • கட்டுபடியாகக் கூடிய தவணைக் கட்டணங்கள்
  • குறைந்தளவிலான ஆவணங்கள் மற்றும் துரித சேவை விநியோகம்
காப்புறுதித் திட்டம் உங்கள் வீட்டுக்கும் அதிலுள்ள பொருட்களுக்கும் பின்வரும் ஆபத்துக்களுக்கு எதிராக பாதுகாப்பினை வழங்குகின்றது:
  • தீ மற்றும் இடி, மின்னல்
  • கலவரம் மற்றும் வேலை நிறுத்தம்
  • தீய நோக்கத்துடன் சேதப்படுத்தப்படுதல்
  • திடீர் வெடி விபத்துக்கள்
  • பூகம்பங்கள்
  • சூறாவளிகள், கடும் காற்றுகள், அதிக வெப்பம் மற்றும் வெள்ளப் பெருக்குகள்/ சுனாமி என்பவற்றை உள்ளடக்கிய இயற்கை அனர்த்தங்கள்
  • தண்ணீர் தாங்கிகள், குழாய்கள் மற்றும் ஏனைய உபகரணங்கள் திடீரென வெடித்தல் மற்றும் அபரிதமித நீர் வெளியேற்றம்
  • விமானங்கள் மூலம் ஏற்படுத்தப்படும் சேதம்
  • திருட்டு காப்புறுதி பாதுகாப்பு (பொருட்களுக்கு மட்டும்)
  • மின்சார கசிவு
  • இடிபாடுகளை அகற்றுதல்
  • தொழில்சார் கட்டணங்கள்
தகைமை
  • காப்புறுதிப் பத்திரதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது ஒரு காப்புறுதி பற்றினைக் கொண்டிருத்தல் வேண்டும்
  • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்
  • காப்புறுதி செய்யப்படும் சொத்துக்கள்/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்