மினிமுத்து தயாத

மினிமுத்து தயாத என்றால் என்ன?

மினிமுத்து தயாதா  காப்புறுதி திட்டத்தின்  மூலம் இன்றே  உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கான வலுவான அடித்தளத்தை அமைக்கவும். உங்கள் பிள்ளைகளுக்கு குறைந்த  விலையில் அதிக லாபம் ஈட்டுவதை உறுதி செய்வதற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மினிமுத்து தயாதா, முதிர்ச்சியின் பொழுது, உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் 125% ஐ வழங்குகின்றது.முதிர்ச்சித் திகதியிலிருந்து 5 வருடங்கள்  தவணை அடிப்புடையில்  மேற்கொள்ளப்படும் ஒரு கொடுப்பனவுடன் இணைந்த விதத்தில் இந்தப் பயன்கள் கிடைக்கின்றன.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
முதிர்ச்சியின் போது அசல் தொகையில் 125%

காப்புறுதி செய்யப்பட்ட தொகையின் 125% முதிர்ச்சியின் பின்னர் வழங்கப்படுகின்றது. இக்கொடுப்பனவு முதிர்ச்சித் திகதியிலிருந்து 5 வருட காலப் பிரிவின் போது பகுதி பகுதியாக வழங்கப்படும். மேலும், காப்புறுதிப் பத்திரம் ஆரம்பமாகும் முதலாவது வருடத்திலிருந்து கூட்டு போனஸ் தொகை கணிப்பீடு செய்யப்பட்டு வழங்கப்படும்

 

உங்கள் பிள்ளைக்கான முதலீடு

உங்கள் பிள்ளை 18 வயதையடையும் பொழுது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஒரு முதலீடு

காப்புறுதி பத்திரத்தின் கால அளவு

பிள்ளையின் வயதுக்கமைய காப்புறுதிப் பத்திரத்தின் காலம் 5 தொடக்கம் 18 வருடங்கள் வரையில்

நெகிழ்ச்சித் தன்மை

நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய தவணைக் கட்டணக் கொடுப்பனவு முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்தம்)

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் நாளொன்றுக்கு இல.ரூ. 1,000

ஒரு விபத்து காரணமாக அல்லது சுகயீனம் காரணமாக பிள்ளை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றால் அப்பிள்ளைக்கென நாளாந்தம் மருத்துவமனை அனுமதி நிதிக் கொடுப்பனவாக இல.ரூ. 1,000 வழங்கப்படும்

மரணம் ஏற்படும் போது வழங்கப்படும் நட்ட ஈட்டுத் தொகை

தவணைக் கட்டணம் செலுத்தப்படும் காலப் பிரிவின் போது பெற்றோர் ஒருவரின் இயற்கை மரணம் இடம்பெற்றால் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையின் 3 மடங்குடன், கூட்டு போனஸ் தொகைகளையும் உடனடியாகப் பெற்றுக் கொள்வதற்கான உரித்தினைப் பிள்ளை கொண்டிருக்கும். மேலும், அதன் பின்னர் அனைத்து தவணைக் கொடுப்பனவுகளும் இரத்து செய்யப்படும். அத்துடன் காப்புறுதிப் பத்திரத்தின் முதிர்ச்சியின் போது பிள்ளைக்கு தவணைக் கட்டணத் தொகைகளின் மும்மடங்கும் கிடைக்கும்

மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை

தவணைக் கட்டணம் செலுத்தப்படும் காலப் பிரிவின் போது பெற்றோர் ஒருவர் விபத்து காரணமாக மரணமடைந்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் 5 மடங்கையும், கூட்டு போனஸ் கொடுப்பனவுகளையும் உடனடியாகப் பெற்றுக் கொள்வதற்கான உரித்து பிள்ளைக்குக் கிடைக்கும். அத்துடன் அதன் பின்னரான அனைத்துத் தவணைக் கட்டணங்களும் இரத்து செய்யப்படும். பெற்றோரின் மரணத்தின் பொழுது முதிர்ச்சியின் போது உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் போனஸ் தொகையில் மூன்று மடங்கு பிள்ளைக்குச் செலுத்தப்படும்

மரணத்தின் போது வழங்கப்படும் நட்ட ஈட்டுத் தொகை

காப்புறுதிப் பயன்களைச் செலுத்தும் காலப் பிரிவின் போது பெற்றோர் ஒருவர் விபத்தில் மரணமடைந்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் 5 மடங்கினையும், கூட்டு போனஸ் கொடுப்பனவையும் உடனடியாக பெற்றுக் கொள்வதற்கான உரித்தினை பிள்ளை கொண்டிருக்கும். மேலும், எதிர்கால தவணைக் கட்டணத் தொகைகள் அனைத்தும் மும்மடங்காக்கப்படும்

பெற்றோர் ஒருவரின் உடல் இயலாமை

தவணைக் கட்டணம் செலுத்தப்படும் காலப் பிரிவின் போது பெற்றோர் ஒருவர் (ஆயுள் காப்பீடு செய்யப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில்) முழுமையாகவும், நிரந்தரமாகவும் உடல் இயலாமை நிலையை அடைந்தால் மேலும் செலுத்த வேண்டிய அனைத்து தவணைக் கட்டணங்களும் உடனடியாக இரத்து செய்து கொள்வதற்கான உரித்தினை பிள்ளை கொண்டிருக்கும். மேலும், உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகைக்கு இணையான ஒரு தொகை 5 சமமான தவணைக் கட்டணங்களில் செலுத்தப்படும். முதிர்ச்சியின் போது பிள்ளை தவணைக் கட்டணத் தொகைகளின் மும்மடங்கைப் பெற்றுக் கொள்ளும். இறுதித் தவணைக் கட்டணத்துடன் கூட்டு போனஸ் கொடுப்பனவுகள் வழங்கப்படும்

மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புக்கள்

கடுமையான நோய்களுக்கான காப்புறுதி, உடல்நலக் காப்புறுதி, இறுதிக் கிரியை செலவுகளுக்கான காப்புறுதி மற்றும் பல வசதிகளுடன் மேலதிகக் காப்புறுதிகளுடன் விரிவாக்கத்தக்கதாகும்

தகைமை
  • 1 தொடக்கம் 13 வயது வரையிலான பிள்ளைகளின் சார்பில் 20 தொடக்கம் 65 வயது வரையிலான பெற்றோர் காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
  • காப்புறுதிப் பத்திரம் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் பிள்ளை 18 வயதைத் தாண்டியதாக இருந்து வரக் கூடாது.
  • உத்தரவாதப்படுத்தப்பட்ட ஆகக் குறைந்த தொகை இல.ரூ. 100,000 ஆக இருந்து வருதல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்