மருத்துவமனைக் காசுத் திட்டம் என்பது நீங்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் பொழுது, உண்மையான கட்டணப் பட்டியல்கள் அல்லது செலவுகள் என்னவாக இருந்து போதிலும் ஒவ்வொரு நாள் தொடர்பாகவும் உங்களுக்கு நிலையான ஒரு தொகையை வழங்கும் தனித்துவமான, புதுமைப் புனைவிலான ஒரு உடல்நலக் காப்புறுதித் திட்டமாகும். இது மேலதிகச் செலவுகளை ஈடு செய்து கொள்வதற்கு தினசரி காசுக் கொடுப்பனவின் வடிவில் காப்புறுதிப் பத்திரதாரருக்கு காப்புறுதிப் பாதுகாப்பை வழங்குகின்றது.
இல.ரூ. 12,500 நாளாந்த அடிப்படையில்
மருத்துவச் செலவுகளை ஈடு செய்து கொள்வதற்கென நாளாந்த அடிப்படையில் இல.ரூ. 12,500 வரையில்
நாளாந்த காசுத் தொகையை இரட்டிப்பாக்கும் அனுகூலம்
தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தால் உங்களுக்கு கிடைக்கும் நாளாந்த காசுத் தொகையை இல. ரூ. 25,000 ஆக இரட்டிப்பாக்கப்படும்
4 நாட்கள் காசு அனுகூலம்
மருத்துவமனையில் சார்ந்திருக்கும் காலம் 10 நாட்களுக்கு மேல் நீடித்தால் மேலதிக 4 நாட்களுக்கான காசுக் கொடுப்பனவு
மருத்துவமனை காசு அனுகூலம்
ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் மருத்துவமனை காசு அனுகூலம் வருடாந்தம் 180 நாட்கள் வரையில் செலுத்தப்படும்
வருடாந்த உச்ச வரம்பில் 5 மடங்கு வரையில்
மொத்த காப்புறுதிக் காலப் பிரிவு தொடர்பாகவும் வருடாந்த உச்ச வரம்பில் 5 மடங்கு செலுத்தப்படும்
- 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்த வயது வந்தவர்கள் இக்காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அவை 70 ஆவது வயதில் முடிவுக்கு வரும். பிள்ளைகள் 3 மாதங்கள் தொடக்கம் 20 வருடங்கள் வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்து வருதல் வேண்டும். 25 வயது வரையில் அவர்களுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படும்.
- இது ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்துடன் பெறப்படுதல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.