அனைத்துமடங்கிய உடல்நலப் பாதுகாப்பு காப்புறுதி பத்திரம் இலங்கையிலும் அதே போல வெளிநாடுகளிலும் ஏற்படும் அறுவை சிகிச்சைச் செலவுகள், மருத்துவச் செலவுகள் மற்றும் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான செலவுகளை உள்ளடக்குகின்றது. ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸின் அனைத்துமடங்கிய உடல்நல பாதுகாப்புத் திட்டம் உங்களுக்கு மட்டுமன்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கும், சார்ந்திருக்கும் பிள்ளைகள் ஐவர் வரையிலும் ஆதரவை வழங்குகின்றது. இந்த காப்புறுதிப் பாதுகாப்பு, கட்டாய ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீடொன்றுடன் கொள்வனவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.
உள்ளடக்கப்படும் பூகோள பிரதேசம் மற்றும்/ அல்லது மருத்துவத் தேவை என்பவற்றைப் பொருத்து காப்புறுதிப் பத்திரதாரர்கள் கிடைக்கும் மூன்று தீர்வுகளில் ஒன்றைத் தெரிவு செய்ய முடியும்.
இலங்கை மட்டும்
இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மலேசியா
உலகளாவிய ரீதியில் (ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா நீங்கலாக)
காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு
5 வருடங்கள் தொடக்கம் 40 வருடங்கள் வரையிலான காலப் பிரிவுடன் கூடிய காப்புறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியும்
பல்வேறு விதமான காப்புறுதிப் பாதுகாப்புகள்
காப்புறுதிப் பத்திரம் வகை A இல.ரூ. 1,000,000 வகை B இல.ரூ. 2,500,000 மற்றும் வகை C: இல.ரூ. 15,000,000
நெகிழ்ச்சித் தன்மை
பெருமளவுக்கு நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய தவணைக் கட்டணங்களைச் செலுத்தும் முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்தம்)
உங்கள் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்
18 வயது வரையிலான காப்புறுதிப் பாதுகாப்பில் உள்ளடக்கப்படுவதற்கான உரித்தினைப் பிள்ளைகளும் கொண்டுள்ளார்கள். இந்த காப்புறுதிப் பாதுகாப்பை 23 வயது வரையில் விரிவாக்கிக் கொள்வதற்கான விருப்பத் தெரிவும் உள்ளது
மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது கிடைக்கும் அனுகூலங்கள்
அறைக் கட்டணங்கள், மருத்துவர்களுக்கான கட்டணங்கள், அறுவை சிகிச்சை கூட கட்டணங்கள், அம்புலன்ஸ் கட்டணங்கள், பிரசவப் பயன்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய மருத்துவமனைப் பயன்களை இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியேயும் பெற்றுக் கொள்ள முடியும்
ஈட்டுத் தொகைக்கான கோரிக்கைகளை முன்வைக்காமைக்கான போனஸ் (No Claim Bonus)
காப்புறுதி கோரிக்கைகள் முன்வைக்கப்படாத ஒவ்வொரு வருடம் தொடர்பாகவும் காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் தொகையில் 25% தொடக்கம் 100% வரையில் No Claim Bonus கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புகள்
ஓய்வு கால திட்டங்கள், சிறுவர் முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் வேறு பல திட்டங்கள் போன்ற மேலதிக பாதுகாப்புக்கான ஆயுள் காப்பீட்டு விருப்பத் தெரிவுகளைத் தவிர மேலும் பல மேலதிகப் பாதுகாப்புகள்
காசுப் பாவனையற்ற அட்டை முறை
காசுப் பாவனையற்ற அட்டை முறை இந்த காப்புறுதிப் பாதுகாப்புக்கு பொருந்தக் கூடியதாகும்
- 70 வயதில் காப்புறுதிப் பாதுகாப்பு முடிவடையும் விதத்தில் 18 தொடக்கம் 60 வரையிலான வயதுப் பிரிவைச் சேர்ந்த வயது வந்தவர்கள் காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
- அவை கட்டாயமாக ஸ்ரீ லங்கா இன்சூரன்ஸ் ஆயுள் காப்பீட்டுப் பத்திரத்துடன் பெற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.