திருட்டுக்கான காப்புறுதி

திருட்டுக்கான காப்புறுதி என்றால் என்ன?

வீடுடைத்து திருடுபவர்களினால் உங்கள் சொத்துக்கு ஏற்படக் கூடிய நட்டங்கள் அல்லது சேதங்கள் என்பவற்றிலிருந்து உங்கள் வீட்டையும், உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவும் திருட்டுக்கான காப்புறுதித் திட்டம் தனி வீடுகளுக்கு மிகவும் பொருத்தமானதொரு திட்டமாகும். அனைத்துமடங்கிய இந்தக் காப்புறுதிப் பத்திரத்தை நீங்கள் பெற்றுக் கொள்ளும் பொழுது உங்கள் வீட்டின் பாதுகாப்பும், உங்கள் பெறுமதி மிக்க பொருட்களின் பாதுகாப்பும் உங்களுடைய வேலைப்பளு மிகுந்த வாழ்க்கை மாதிரிக்கு மேலும் ஒரு தொந்தரவாக இருந்து வர மாட்டாது.

 

விதிகள் மற்றும் நிபந்தனைகள்:

  • கட்டடம் பிரத்தியேகமாக ஒரு தனியார் வாழிடமாக/ வீடாக பயன்படுத்தப்படுதல் வேண்டும்; ஏனைய நோக்கங்களுக்காக அல்லது வீட்டுக் கைத்தொழில்களுக்காக அது பயன்படுத்தப்படக் கூடாது.
  • கட்டடம் நல்ல நிலையில் பழுதுபார்க்கப்பட்டதாக இருந்து வருதல் வேண்டும்.
  • செங்கற்கள்/ கொங்ரீட்/ சீமெந்து கற்கள் என்பவற்றைக் கொண்டு சுவர்கள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதுடன், கூரை பொருத்தப்பட்டிருத்தல் வேண்டும்.
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
சொத்து இழப்புக்களின் போது கிடைக்கும் காப்புறுதி பாதுகாப்பு

தளபாடங்கள், மின்சார மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள், பெறுமதியான பொருட்கள், ஓவியங்கள், புராதன வஸ்துக்கள் போன்ற சொத்துக்கள் திருட்டு/ வீடுடைப்பு மற்றும் களவு என்பவற்றின் காரணமாக இழக்கப்படும் பொழுது அவற்றுக்கு காப்புறுதிப் பாதுகாப்பு கிடைக்கின்றது

சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கான காப்புறுதி பாதுகாப்பு

பலவந்தமாக பிரவேசித்தல் அல்லது வெளியேறுதல் அல்லது அத்தகைய ஏதேனும் முயற்சிகள் காரணமாக (பூட்டுகள், கதவுகள், யன்னல்கள் போன்ற) சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்துக்கான காப்புறுதி பாதுகாப்பு

இலகுவான தீர்ப்பனவு

ஈட்டுத்தொகை கோரிக்கைகளுக்கு மிகவும் வசதியான விதத்தில் தீர்ப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளும் செயன்முறை

தகைமை
  • காப்புறுதிப் பத்திரதாரர் சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான காப்புறுதிப் பற்றை கொண்டிருத்தல் வேண்டும்.
  • இலங்கையின் சட்ட தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி பத்திரதாரர் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதி செய்யப்படும் சொத்துக்கள்/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்