வீட்டுப் பாதுகாப்புக் காப்புறுதி

வீட்டுப் பாதுகாப்புக் காப்புறுதி என்றால் என்ன?

அனைத்துமடங்கிய வீட்டுக் காப்புறுதிப் பத்திரமான Home Protect வீட்டுப் பாதுகாப்பு எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத ஆபத்துக்கள் மற்றும் சட்டப் பொறுப்புக்கள் என்பவற்றுக்கு எதிராக உங்களது பெறுமதி மிக்க சொத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு மிகச் சிறந்த ஒரு வழியாக இருந்து வருகின்றது. Home Protect காப்புறுதித் திட்டங்கள் உங்கள் வீடு, உங்கள் குடும்பம், உங்களுடைய பெறுமதிமிக்க பொருட்கள்  என்பனவற்றுக்கும், உங்கள் வீட்டுப் பணியாளர்களுக்கும் ஓர் அனர்த்தத்தின் போது பாதுகாப்பை வழங்குகின்றது.

 

விதிகள் மற்றும் நிபந்தனைகள்:

 • சம்பந்தப்பட்ட கட்டடம் ஒரு தனிப்பட்ட வசிப்பிடமாக/ வீடாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வருதல் வேண்டும். அது ஏனைய நோக்கங்களுக்காக அல்லது வீட்டுக் கைத்தொழில்களுக்காகப் பயன்படுத்தப்படக் கூடாது.
 • குறிப்பிட்ட கட்டடம் நன்றாகப் பழுது பார்க்கப்பட்ட நிலையில் இருந்து வருதல் வேண்டும்.
 • கட்டுமானச் சுவர்கள் செங்கற்கள்/ கொங்கிரீட்/ சீமெந்துக் கற்கள் என்பவற்றால் நிர்மாணிக்கப்பட்டதாகவும், கூரையைக் கொண்டதாகவும் இருந்து வருதல் வேண்டும்.
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
Home Protect காப்புறுதித் திட்டம் உங்கள் வீட்டுக்கு பின்வரும் இடர்களிலிருந்து பாதுகாப்பைப் பெற்றுத் தருகிறது:
 • தீ மற்றும் இடி மின்னல்
 • பயங்கரவாதம், கலவரங்கள், வேலை நிறுத்தங்கள் மற்றும் உள்நாட்டு கிளர்ச்சிகள்
 • தீய நோக்கத்துடன் சேதம் விளைவித்தல்
 • வெடி விபத்துக்கள்
 • பூகம்பங்கள்
 • சூறாவளி/ கடுங்காற்று/ அதி வெப்பம்/ வெள்ளப் பெருக்கு
 • இயற்கை அனர்த்தங்கள்
 • கடும் தாக்கங்களினால் ஏற்படும் சேதம்
 • மரங்கள் விழுதல், தொலைபேசி கம்பங்கள், மின் கம்பங்கள் என்பன விழுதல்
 • விமானங்கள் மூலம் ஏற்படக் கூடிய சேதம்
 • திருட்டு, வீடுடைத்துத் திருடுதல் அல்லது களவெடுப்பதற்கான ஏதேனும் முயற்சி
 • கைக் கண்ணாடிகள் தவிர ஏனைய கண்ணாடிகள் தற்செயலாக உடைதல்
 • நிலையான மற்றும் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளுக்கு தற்செயலாக ஏற்படும் சேதங்கள்
 • பொதுவான சட்டப் பொறுப்புக்களுக்கு எதிரான காப்புறுதிப் பாதுகாப்பு
பின்வரும் காப்புறுதிகள் மூலம் உங்கள் வீட்டைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்:
 • கட்டடங்கள், வாயில் கதவுகள், நீச்சல் தடாகம், மதில் சுவர்கள்
 • தளபாடங்கள், மின்சார உபகரணங்கள், இலத்திரனியல் உபகரணங்கள் என்பவற்றை உள்ளடக்கிய வீட்டிலுள்ள பொருட்கள்
 • நகைகள், வீட்டில் வைத்திருக்கும் சொந்தக் காசு, பெறுமதியான கற்கள் (லப்டொப், கணினிகள், தொலைபேசிகள், தனிப்பட்ட கமராக்கள், PC டப்லட்கள் போன்ற) இலத்திரனியல் உபகரணங்கள், இசைக் கருவிகள் போன்ற பெறுமதிமிக்க தனிப்பட்ட பாவனைப் பொருட்கள்
 • ஓவியங்கள் மற்றும் புராதனப் பொருட்கள்
காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் பொருட்களுக்கு ஒரு இழப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்வருவனவற்றுக்கான செலவுகள் ஈடுசெய்யப்படும்:
 • இடிபாடுகளை அகற்றுதல்
 • மீள் கட்டுமான காலப் பிரிவின் போது மாற்று வசிப்பிடத்துக்கான செலவுகள்
 • வீட்டு வளவுக்குள் பொது வசதி இணைப்புக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சேதங்கள் (மின்சாரம், தண்ணீர், எரிவாயு இணைப்பு முதலியவை)
 • தொழில்சார் கட்டணங்கள் (பொறியியலாளர், நில அளவையாளர் மற்றும் கட்டடக் கலைஞர் போன்றோருக்கான செலவுகள்)
 • ஆவணங்கள் மற்றும் உறுதிகள் என்பவற்றை மீள உருவாக்குவதற்கான செலவு
கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் அனுகூலங்களும் கிடைக்கும்:
 • நியமனம் செய்யப்பட்டிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி (வயதெல்லை 70 வருடங்கள்)
 • வீட்டுப் பணியாளர்கள் விபத்து மரணம் அல்லது மொத்த உடல் இயலாமை - வேலையின் போது ஏற்படும் காயங்களுக்கு நிரந்தரமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கொடுப்பனவு (வயதெல்லை 60 வருடங்கள்)
 • காப்புறுதி செய்யப்பட்டிருப்பவருக்கு தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி (வயதெல்லை 70 வருடங்கள்) இயற்கை மரண காப்புறுதி (வயதெல்லை 60 வருடங்கள்)
தகைமை
 • காப்புறுதிப் பத்திரதாரர் சம்பந்தப்பட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 • காப்புறுதி செய்யப்படும் சொத்துக்கள்/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்