கொவிட் 19 உதவி

மேலும் தகவல்களை இங்கே வாசிக்கவும்..

 

Ayubo. life திட்டத்துக்கூடாக ஸ்ரீ லங்கா இன்ஷுரன்சின் மருத்துவப் பயன்கள்

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் Ayubo. life திட்டத்துடன் கூட்டாக இணைந்து ஸ்ரீலங்கா இன்ஷுரன்ஸ் காப்புறுதிப் பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு தனிமைப்படுத்தல் உதவி மற்றும் மருத்துவ உதவிச் சேவை என்பவற்றை வழங்குகின்றது.


இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் முதலாவது 50,000 காப்புறுதி பத்திரதாரர்கள் Ayubo. life திட்டத்துக்கூடாக ஒரு வருட காலப் பிரிவுக்கு பின்வரும் அனுகூலங்களை இலவசமாகப் பெற்றுக் கொள்வார்கள்:

1. கொவிட் - 19 நிவாரணத்தை அடிப்படையாகக் கொண்ட அனுகூலம்

நோய் சம்பந்தப்பட்ட அனுகூலங்கள்

a. ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தொடர்பான பூர்வாங்க மதிப்பீடு. இது கேள்விக் கொத்துகளுக்கூடாக மேற்கொள்ளப்படுவதுடன், அதனை அடுத்து மருத்துவர் ஒருவரின் பரிசோதனை இடம்பெறுகிறது.
b. நாளாந்த நோய்க்குறி பரிசோதனை
c. நிபுணர்களை அணுகுவதற்கான வாய்ப்பு

• சிகிச்சை மருத்துவர்கள்
• அனைவரையும் சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு உதவுவதற்கென உடல் பொருத்தப்பாடு தொடர்பான அறிவுறுத்துனர்கள்
• போஷாக்கு தொடர்பான ஆலோசனையை வழங்குவதற்கு போஷாக்கு நிபுணர்கள்

d. மருந்துகளை விநியோகம் செய்தல்
e. தகவல் பொதி


இலகுபடுத்தல் மற்றும் ஆதரவுச் சேவைகள்

a. துப்புரவு செய்தல் தொடர்பான வழிகாட்டுதல்கள்
b. அரசாங்க வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்ட நடைமுறை அறிவுறுத்தல்கள்

• வீட்டிலிருந்து வேலை செய்தல்
• பலசரக்கு பொருட்களைப் பெற்றுக் கொள்ளல்
• தேகாப்பியாசம்
• ஆரோக்கியமான உணவை உட்கொள்ளல்
• பிள்ளைகளின் கல்வி

c. குடும்ப நேரத்தை மிகச் சிறந்த விதத்தில் பயன்படுத்துவதற்கான யோசனைகள்

2. Ayubo.life திட்டத்தின் ஏனைய அனுகூலங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்

a. ஆரோக்கிய வாழ்வுக்கான நாளாந்த யோசனைகள் மற்றும் தகவல்கள்.
b. நிபுணர்களை அணுகுவதற்கான வாய்ப்பு.
c. சிகிச்சை மருத்துவர்கள்.
d. அனைவரையும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் பொருட்டு உடல் பொருத்தப்பாட்டு அறிவுறுத்துனர்கள்.
e. போஷாக்கு தொடர்பான ஆலோசனைகளுக்கான போஷாக்கு வல்லுனர்கள்.
f. குடும்பத்தினரை செயல் முனைப்புடனும், ஊக்கத்துடனும் வைத்திருக்கும் பொருட்டு படிப்படியாக சவால்களை எதிர்கொள்ளல்.


ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் காப்புறுதி பத்திரதாரர்கள் Ayubo.life திட்டத்துடன் இணைந்த விதத்தில் ஒன்லைன் மருத்துவப் பராமரிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமையைக் கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் செயலியை (SLIC App) தரவிறக்கம் செய்யுங்கள். Ayubo.life திட்டத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு Offers என்ற பகுதியை அழுத்துங்கள்.

Android: https://play.google.com/store/apps/details?id=com.slic.customer

IOS: https://apps.apple.com/lk/app/slic-customer/id1476655848

 

செயற்படுத்தலுக்கான வழிகாட்டுதல்களைப் பார்ப்பதற்கு அழுத்தவும்

விதிகள் மற்றும் நிபந்தனைகள் என்பவற்றைப் பார்ப்பதற்காக அழுத்தவும்