தனி கட்டுப்பண திட்டம்

தனி கட்டுப்பண திட்டம் என்றால் என்ன?

ஓய்வு பெற்ற பின்னர் தொந்தரவில்லாத முதுமைக்கால வாழ்க்கையொன்றை அனுபவிக்கும் பொருட்டு நீங்கள் எமது ப்ரீடம் தனியொரு தவணைக் கட்டணத் திட்டத்தைத் தெரிவு செய்து கொள்ள முடியும். உங்களுடைய தவணைக் கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்துவதன் மூலம் இதன் பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஓய்வு பெற்ற பின்னர் உங்களுக்கு உரிய மாத வருமானமொன்று தொடர்ந்து கிடைக்கும். அது ஓய்வு பெற்ற பின்னர் உங்கள் நிதி சுயாதீனத்தை உத்தரவாதப்படுத்தும்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
ஒரேயொரு கொடுப்பனவு மட்டும்

தனியொரு தவணைக் கட்டணக் கொடுப்பனவு

உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வு கால வருமானம்

உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வு கால வருமானத்தில் கூட்டு வட்டி அடிப்படையில் 5% அதிகரிப்பு

வருடாந்த சுகாதார பராமரிப்பு கொடுப்பனவு

மாதாந்த ஓய்வு கால கொடுப்பனவிலும் (விருப்பத் தெரிவு) 5 மடங்கு அதிகமான வருடாந்த உடல்நலப் பராமரிப்பு கொடுப்பனவு வழங்கப்படும். மேலும், அத்தொகை கூட்டு வட்டி அடிப்படையில் வருடாந்தம் 5% அதிகரித்துச் செல்லும். இந்தத் தொகை ஒவ்வொரு வருடமும் ஒரே தடவையில் செலுத்தப்படும்

காப்புறுதிப் பத்திரத்தின் காலம்

காப்புறுதிப் பத்திரத்தின் காலம் 5 தொடக்கம் 40 வருடங்கள் வரையில்

நெகிழ்ச்சித் தன்மை

ஓய்வு கால நிதியத்தைப் பெற்றுக் கொள்ளும் காலப் பிரிவு தேவையின் பிரகாரமும், திட்டத்தின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படும் உறுதிப்படுத்தலின் பிரகாரமும் 5, 10, 15 அல்லது 20 வருடங்கள் வரையில் வேறுபட முடியும்

மேலதிக காப்புறுதிப் பாதுகாப்புகள்

விபத்துக்கள் காரணமாக ஏற்படும் நீடித்த நிரந்தர உடல் ஊனம், நோய் மற்றும் குடும்பப் பாதுகாப்பு அனுகூலங்கள் போன்ற அதிகரித்தளவிலான பாதுகாப்புக்கான மேலதிகக் காப்புறுதிகளுடன் இணைந்த விதத்தில்

கூட்டு போனஸ் கொடுப்பனவுகள்

இறுதி வருடாந்தக் கொடுப்பனவின் போது கூட்டு போனஸ் கொடுப்பனவுகள் செலுத்தப்படும்

மரணத்தின் போது நட்ட ஈடு

தவணைக் கட்டணம் செலுத்தி வரும் காலப் பிரிவின் போது மரணம் இடம்பெற்றால் செலுத்தப்பட்ட மொத்தத் தவணைக் கட்டணங்களை அல்லது காப்புறுதிப் பத்திரத்தின் ஒப்படைப்புப் பெறுமதி என்பவற்றில் எது உயர்வானதாக இருந்து வருகின்றதோ அத்தொகை நட்டஈடாக செலுத்தப்படும்

மரணத்தின் போது நட்ட ஈடு

ஓய்வு காலத் திட்டம் ஆரம்பித்த பின்னர் மரணம் இடம்பெறும் பொழுது, காப்புறுதிப் பத்திரத்திலுள்ள பட்டியலின் பிரகாரம் ஓய்வு கால நிதியத்தின் மிகுதித் தொகை நியமனம் செய்யப்பட்டிருப்பவருக்கு செலுத்தப்படும்

நீண்ட கால நிரந்தர உடல் இயலாமை

விபத்து/ நோய் காரணமாக சமர்ப்பிக்கப்படும் நீண்ட கால நிரந்தர உடலியலாமை பயன்களுக்கான கோரிக்கை முன்வைக்கப்படும் போது எதிர்காலத் தவணைக் கொடுப்பனவுகள் இரத்து செய்யப்படும். மேலும், காப்புறுதிப் பத்திரத்திலுள்ள பட்டியலின் பிரகாரம் மாதாந்த வருமானத்தைப் பெற்றுக் கொள்வதற்குக் காப்புறுதிதாரர் உரித்துடையவராக இருந்து வருவார்

தகைமை
  • குறைந்தபட்ச தனியொரு தவணைக் கட்டணம் இல. ரூ. 50,000
  • 18 தொடக்கம் 65 வயது வரையிலான வயதுப் பிரிவினர் ப்ரீடம் ஓய்வு காலத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமையைக் கொண்டுள்ளார்கள்.
  • காப்புறுதிப் பத்திரதாரர்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓய்வு வயது 45 தொடக்கம் 70 வருடங்கள் வரையில்.
  • நிலையான ஓய்வூதியத் திட்டங்கள் எவையும் இல்லாத தனியார் துறையில் வேலை செய்து வரும் ஊழியர்களுக்குப் பொருத்தமானதாகும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்