உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் ஒரு விரிவான திட்டத்தின் மூலம் எதிர்பாராத இழப்பு அல்லது நிகழ்வை உள்ளடக்கியது, உங்கள் பிள்ளையின் எதிர்கால நிதி சசுதந்திரத்தை , மேலதிக பயன்களையும் உத்தரவாதப்படுத்துகின்றது. . மினிமுத்து சிறுவர் திட்டத்தின் மூலம் உங்கள் குழந்தை மற்றும் பெற்றோர் இருவரையும் காப்பீடு செய்வதன் மூலம் நாங்கள் உங்களுக்கு மன அமைதியை வழங்குகிறோம், அங்கு உங்கள் குழந்தை இளம் வயதிலேயே அவர்களின் லட்சியங்களைப் பின்பற்றலாம், வெளிப்புற சூழ்நிலைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக இருந்தாலும் கூட அவர்கள் இவ்விதம் தமது அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
காப்புறுதி பத்திரத்தின் காலம்
பிள்ளையின் வயதுக்கமைய 5 வருடங்கள் தொடக்கம் 20 வருடங்கள் வரையிலான காப்புறுதிப் பத்திரங்கள் கிடைக்கின்றன
பெற்றோர் இருவருக்கும் காப்புறுதிப் பாதுகாப்பு
ஒரே காப்புறுதிப் பத்திரத்தில் பெற்றோர் இருவருக்கும் காப்புறுதிப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது
முதிர்ச்சியின் போது 140% அனுகூலங்கள்
உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை முதிர்ச்சியின் போது 140% பயனைப் பெற்றுக் கொடுக்கும். அது 4 வருடங்களின் போது நான்கு சமமான தவணைக் கட்டணங்களில் செலுத்தப்படும். செலுத்தப்படும் தொகையில் 35% ஐ பிள்ளை தனது உயர் கல்விக்கென பயன்படுத்திக் கொள்ள முடியும்
நெகிழ்ச்சித் தன்மை
பெருமளவுக்கு நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய விதத்தில் தவணைக் கட்டணங்களைச் செலுத்தக் கூடிய வாய்ப்பு. (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்தம்)
உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையின் இரு மடங்கு
தவணைக் கட்டணத்தைச் செலுத்தும் காலப் பிரிவின் போது உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் இரு மடங்கைப் பெற்றுக் கொள்வதற்கும், எதிர்காலத் தவணைக் கட்டணங்கள் அனைத்தையும் இரத்து செய்வதற்கும் உடனடியாகப் பிள்ளைக்கு உரித்து கிடைக்கின்றது. மேலும், முதிர்ச்சியின் போது பிள்ளை உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகையில் 140% ஐ தவணைகளில் பெற்றுக் கொள்ளும். அதனுடன் இணைந்த விதத்தில் கூட்டு போனஸ் தொகைகளும் வழங்கப்படும்
மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை
பயன்களைச் செலுத்தும் காலப் பிரிவின் போது பெற்றோர் ஒருவரின் மரணம் ஏற்பட்டால் பிள்ளை மிகுதிப் பயன்களில் இரு மடங்கைப் பெற்றுக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கும்
மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை
தவணைக் கட்டணம் செலுத்தப்படும் காலப் பிரிவின் போது காப்புறுதி செய்யப்பட்ட பிள்ளையின் மரணம் நிகழ்ந்தால் பெற்றோர் தவணைக் கட்டண மதிப்பில் 125% ஐ அல்லது காப்புறுதிப் பத்திரத்தை ஒப்படைக்கும் பெறுமதியில் எது உயர்வானதோ அதனைப் பெற்றுக் கொள்வதற்கான உரித்தினைப் கொண்டிருப்பார்கள்
மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை
பயன்கள் செலுத்தப்படும் காலப் பிரிவின் போது பிள்ளையின் மரணம் நிகழ்ந்தால் பெற்றோர் மிகுதிக் கொடுப்பனவுகளை தவணைக் கட்டணங்களில் பெற்றுக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டுள்ளார்கள்
.
மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புக்கள்
கடுமையான நோய்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதிப் பாதுகாப்பு, விபத்து மரண காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் வேறு பல நிலைமைகளின் போது உயரளவிலான பாதுகாப்பை வழங்குவதற்கென மேலதிக காப்புறுதிப் பாதுகாப்புக்களுடன் சேர்ந்து விரிவாக்கத்தக்கதாகும்
- ஒரு மாதம் தொடக்கம் 15 வயது வரையிலான பிள்ளைகளின் சார்பில் 18 தொடக்கம் 60 வயது வரையிலான பெற்றோர் காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
- காப்புறுதிப் பத்திரம் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் பிள்ளை 21 வயதை மிகைத்ததாக இருந்து வரக் கூடாது.
- காப்புறுதி செய்யப்படும் ஆகக் குறைந்த தொகை இல.ரூ. 100,000 ஆக காணப்பட வேண்டும்.
- உங்கள் பிள்ளை ஒரு மாத வயது தொடக்கம் ஆரோக்யா மருத்துவமனை காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் ஜீவக்க கடுமையான நோய்களுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு என்பவற்றை சாதாரண செலவில் பெற்றுக் கொள்வதற்கான உரித்தினைக் கொண்டிருக்கும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.