மோட்டார் ப்ளஸ் லோயல்டி வெகுமதிகள் (Motor Plus Royalty Rewards)

மோட்டார் ப்ளஸ் லோயல்டி வெகுமதிகள் என்றால் என்ன?

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் பல தலைமுறை காலம் இலங்கையின் நம்பிக்கைக்குரிய மோட்டார் வாகன காப்புறுதித் துறையில் தலைமை ஸ்தானத்தில் இருந்து வருகிறது. அந்த வகையில் அது அதன் விசுவாசமிக்க மோட்டார் காப்புறுதி பத்திரதாரர்களுக்கு தனது நன்றியைத் தெரிவிக்கும் விதத்தில் பெருமளவுக்கு வெகுமதிகளைக் கொண்டிருக்கும் மோட்டார் ப்ளஸ் லோயல்டி நிகழ்ச்சித் திட்டத்தைத் துவக்கி வைத்துள்ளது.

 

மோட்டார் ப்ளஸ் காப்புறுதிப் பத்திரதாரர்களுக்கு மாபெரும் சீட்டிழுப்புப் பரிசுகளையும் உள்ளடக்கிய எண்ணற்ற வெகுமதிகளையும், பயன்களையும் வழங்கும் நோக்கத்துடன் மோட்டார் ப்ளஸ் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதிகரித்தளவில் உருவாகிவரும் பெறுமதி சேர் சேவைகளுடன் இணைந்த விதத்தில் இது வழங்கப்பட்டு வருகின்றது. மோட்டார் ப்ளஸ் லோயல்டி ரிவோர்ட்ஸ் திட்டம் உள்ளூர் சந்தையில் செயற்படுத்தப்பட்டு வரும் முன்னணி லோயல்டி திட்டமாக இருந்து வருகின்றது. அது அற்புதமான பல பயன்களைக் காப்புறுதிப் பத்திரதாரர்களுக்கு வழங்குவதுடன், ஈடிணையற்ற 24*7 வாடிக்கையாளர் சேவையையும் கொண்டுள்ளது. காப்புறுதிப் பத்திரதாரர்களின் உச்ச மட்ட சௌகரியத்தைக் கருத்திற் கொண்டு இலங்கையின் முதன்மை வாகன முகவர்களுடன் இணைந்த விதத்தில் இது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வர்த்தகர்கள்
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
தகைமை
  • மோட்டார் ப்ளஸ் காப்புறுதிப் பத்திரதாரர்கள் தமது காப்புறுதிப் பத்திரத்தைப் புதுப்பிக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது ஒரு புதிய காப்புறுதிப் பத்திரத்தைக் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பத்தில் ரிவோர்ட்ஸ் நிகழ்ச்சித் திட்டத்தில் இணைந்து கொள்வதற்கான தகைமையைப் பெற்றுக் கொள்கிறார்கள்.
  • மோட்டார் ப்ளஸ் காப்புறுதி அட்டையை ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் எந்தவொரு மோட்டார் ப்ளஸ் லோயல்டி ரிவோர்ட்ஸ் திட்டத்தின் பங்காளர் வர்த்தகரிடமும் சமர்ப்பிப்பதன் மூலம் மோட்டார் ப்ளஸ் வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்