பிரயாணப் பாதுகாப்பு (Travel Protect)

பிரயாணப் பாதுகாப்பு என்றால் என்ன?

வெளிநாட்டுப் பயணிகளுக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் பயணப் பாதுகாப்பு காப்புறுதித் திட்டம் (Travel Protect) வெளிநாட்டுப் பயணத்தின் போது, பயணத் தொடக்கத்திலிருந்து பல்வேறு கட்டங்களில் ஏற்படக் கூடிய எதிர்பாராத நிலைமைகளை உள்ளடக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பயணப் பொதிகளின் திருட்டு தொடக்கம் வெளிநாட்டில் எதிர்பாராத விதத்தில் ஏற்படக் கூடிய மருத்துவச் செலவுகள் வரையில் பல்வேறு ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பை வழங்கும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் பயணப் பாதுகாப்புத் திட்டம், நீங்கள் வீட்டிலிருந்து வெளியேயிருக்கும் காலப் பகுதியின் போது உங்கள் மன நிம்மதியை உறுதிப்படுத்தக் கூடிய ஒரு திட்டமாக இருந்து வருகின்றது. அதே வேளையில், அது உங்களுடைய வீட்டின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்றது.

 

Travel Protect பாதுகாப்பு 4 காப்புறுதித் திட்டங்களைக் கொண்டுள்ளது:

 

ஏஷியா 25 (Asia 25)
ஜப்பானைத் தவிர ஏனைய ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ளது.
உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை
25,000 அமெரிக்க டொலர்
சில்வர் (Silver)
ஐக்கிய அமெரிக்கா/ கனடா தவிர உலகளாவிய பயணம் தொடர்பான காப்புறுதிப் பாதுகாப்பு (அரசாங்க ஊழியர்களுக்கு மட்டும்)
உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை
25,000 அமெரிக்க டொலர்
கோல்ட் (Gold)
ஜப்பான் தவிர ஆசிய நாடுகள் மற்றும் ஐக்கிய அமெரிக்கா/ கனடா தவிர்ந்த உலகளாவிய பயணத்துக்கான பயணக் காப்புறுதி
உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை
50,000 அமெரிக்க டொலர்
பிளாட்டினம் (Platinam)
ஐக்கிய அமெரிக்கா/ கனடா தவிர்ந்த உலகளாவிய பயணத்துக்கான பயணக் காப்புறுதி
உத்தரவாதப்படுத்தப்பட்ட தொகை
100,000 அமெரிக்க டொலர்
மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
வெளிநாட்டிலிருக்கும் பொழுது ஏற்படும் திடீர் விபத்துக்கள் மற்றும் மருத்துவச் செலவுகள்

(ஏற்கனவே இருந்து வரும் உடல் நலப் பிரச்சினைகள் தவிர)

நாடு திரும்பிய பின்னர் இலங்கையில் தொடர் சிகிச்சை

 

மருத்துவ சிகிச்சைக்கென அவசரமாக எடுத்துச் செல்லுதல்

 

சடலங்களை நாட்டுக்கு அனுப்பி வைத்தல்

 

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் பொழுது நாளாந்த கொடுப்பனவு

 

அவசரகால தொலைபேசி கட்டணங்கள்

 

விபத்து மரணம் மற்றும் நிரந்தர உடல் இயலாமை (ADPD)

 

விபத்து மரணம் மற்றும் நிரந்தர உடல் இயலாமை பொது விமான சேவை இரட்டிப்பு பாதுகாப்பு

 

உள்ளூர் நல்லடக்கச் செலவுகள்

 

பிள்ளைகளின் கல்விப் பாதுகாப்பு

 

கருணை அடிப்படையிலான பயணம்

 

வயது வராத பிள்ளைகளை திருப்பி அழைத்து வருதல்

 

பயணப் பொதி மற்றும் தனிப்பட்ட பொருட்கள் என்பவற்றின் இழப்பு அல்லது சேதம்

 

பயணப் பொதி தாமதமடைதல்

 

கடவுச் சீட்டு மற்றும் பிரயாண ஆவணங்களின் இழப்பு

 

பயணத்தை ஒத்தி வைத்தல் அல்லது இரத்து செய்தல்

 

பயணத் தடை

 

விமானத்தில் ஆசனம் கிடைக்காமை

 

விமானம் திசை திருப்பப்படுதல்

 

பயணத்தில் ஏற்படும் தாமதம்

 

புறப்பாட்டின் பொழுது விமானத்தை தவறவிடுதல் / இணைப்பு விமானத்தைப் தவறவிடுதல்

 

அவசரகால நிதியுதவி

 

தனிப்பட்ட சட்டப் பொறுப்பு

 

விமானக் கடத்தல்

 

கோல்ப் அனுகூலம்

 

வீட்டுப் பாதுகாப்பு

 

சட்ட கட்டணங்கள்

 

வாடகை வாகனங்களின் மிகையான கட்டணங்கள்

 

பிரயாணக் காலத்தை தானியங்கி முறையில் விரிவாக்குதல் (ஆகக் கூடியது 15 நாட்கள்)

 

24 மணி நேர அவசர கால உதவி

 

தகைமை
  • தனியொரு பயணத்துக்கான காப்புறுதி பத்திரம் தொடர்பான பயணத்தின் ஆகக் கூடிய காலப் பிரிவு 180 நாட்கள்
  • பன்முகப் பயணங்களுக்கான காப்புறுதிப் பத்திரம் தொடர்பாக ஆகக் கூடிய காலப் பிரிவு 45 அல்லது 90 தொடர்ச்சியான நாட்கள். காப்புறுதிப் பத்திர காலப் பிரிவின் போது பயணங்களின் எண்ணிக்கையில் எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லை.
  • காப்புறுதிப் பத்திரதாரர்கள் உச்சமட்ட வயது வரம்பு 80 வருடங்கள்
  • பிள்ளைகளுடன் (எண்ணிக்கையில் வரையறையில்லை) இணைந்த விதத்தில் வயது வந்தவர் ஒருவருக்கு அல்லது இருவருக்கு குடும்பக் காப்புறுதி (அனைத்துப் பிள்ளைகளும் 6 மாதம் தொடக்கம் 18 வரையிலான வயதுப் பிரிவில் இருந்து வருதல் வேண்டும்.)
  • தமது சொந்த பெற்றோருடன் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் 18 வயதுக்குக் குறைந்த அனைத்து பிள்ளைகளுக்கும் சாதாரண விகிதத்திலிருந்து 50% கழிவு
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்