மினிமுத்து பரித்தியாக

மினிமுத்து பரித்தியாக காப்புறுதித் திட்டம் என்றால் என்ன?

அதிகப்படியான தவணைக் கட்டணங்கள் காரணமாக உங்கள் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதைத் தடுக்க வேண்டாம். மினிமுத்து பரித்தியாக சிறுவர் காப்புறுதித் திட்டத்தின் மூலம் நாங்கள்  குறைந்த தவணைக் கட்டணமொன்றுடன் இணைந்த விதத்தில் உங்கள் பிள்ளையின் முழுமையான பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் உங்கள் பொறுப்புக்கு உதவுகிறோம். இப்போது நீங்களும் உங்கள் குழந்தைக்கு பிரகாசமான எதிர்காலத்திற்கான கனவை மினிமுத்து பரித்யாகா குழந்தைகள் திட்டத்துடன் பரிசளிக்கலாம்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
காப்புறுதிப் பத்திரத்தின் காலம்

பிள்ளையின் வயதிற்கமைய காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு 10 தொடக்கம் 24 வருடங்கள் வரையில் இருந்து வரும்

நெகிழ்ச்சித் தன்மை

பெருமளவுக்கு நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய தவணைக் கட்டணக் கொடுப்பனவு முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்தம்)

நிதியுதவி

பிள்ளையின் உயர் கல்விக்கென நிதிகள் தேவைப்படும் 18 தொடக்கம் 25 வயது வரையிலான ஒரு காலப் பிரிவை பெற்றோர் தீர்மானித்துக் கொள்ள முடியும்

மரணத்தின் போது செலுத்தப்படும் நட்ட ஈட்டுத் தொகை

தவணைக் கட்டணத்தைச் செலுத்தி வரும் காலப் பிரிவின் போது பெற்றோர் ஒருவரின் மரணம் நிகழ்ந்தால் உத்தரவாதப்படுத்தப்பட்ட மொத்தத் தொகையையும் உடனடியாகப் பெற்றுக் கொள்வதற்கான உரித்து பிள்ளைக்குக் கிடைக்கும். மேலும், அதன் பின்னர் செலுத்த வேண்டியிருக்கும் அனைத்துத் தவணைக் கட்டணங்களும் இரத்து செய்யப்படும். பிள்ளை அல்லது பாதுகாவலர் காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு முடிவடையும் வரையில் உத்தரவாதப்படுத்தப்பட்ட மொத்தத் தொகையில் மேலதிக 15% கொடுப்பனவொன்றையும் ஒவ்வொரு ஆண்டிலும் பெற்றுக் கொள்வார்கள். அத்துடன் முதிர்ச்சியின் போது கூட்டு போனஸ் தொகைகள் செலுத்தப்படும்

மேலதிகக் காப்புறுதிப் பாதுகாப்புகள்

நிரந்தர உடல் இயலாமை பயன், இறுதிக் கிரியை செலவுகளுக்கான காப்புறுதிப் பாதுகாப்பு, வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதிப் பாதுகாப்பு மற்றும் மேலும் பல வசதிகளுடன் உயரளவிலான பாதுகாப்புக்கான மேலதிகக் காப்புறுதிகளுடன் விரிவாக்கிக் கொள்ளக் கூடியது

தகைமை
  • ஒரு மாதம் தொடக்கம் 15 வருடங்கள் வரையிலான வயதுப் பிரிவைக் கொண்டிருக்கும் பிள்ளைகளின் சார்பில் 18 தொடக்கம் 60 வயது வரையிலான பெற்றோர் காப்புறுதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
  • காப்புறுதி உத்தரவாதப்படுத்தப்படும் ஆகக் குறைந்த தொகை இல.ரூ. 50,000 ஆக இருந்து வருதல் வேண்டும்.
  • ஒரு மாதம் வயது தொடக்கம் சாதாரண செலவில் ஆரோக்யா மருத்துவமனை காப்புறுதி மற்றும் ஜீவக்க கடும் நோய்களுக்கான காப்புறுதி என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு உங்கள் பிள்ளை உரித்துடையதாக இருந்து வரும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்