ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கௌரவ

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் கௌரவ என்றால் என்ன?

பிரத்தியேகமாக தொழில்வாண்மையாளர்களுக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் கௌரவ காப்புறுதித் திட்டம் அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது. நவீன தொழில்வாண்மையாளர்களின் துரித வேகத்தில் மாற்றமடைந்து வரும் வாழ்க்கை மாதிரிகளுக்கு ஈடு கொடுக்கக் கூடிய விதத்தில் அவர்களுடைய உடல் நலம், நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்கென இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
தனிப்பட்ட விபத்துக் காப்புறுதி

 

செலவுகளை ஈடு செய்தல்

சுகவீனம் அல்லது விபத்துக்களின் விளைவாக ஏற்படும் காயங்களின் போது சுகாதார பராமரிப்பு மற்றும் மருத்துவச் செலவுகளை ஈடு செய்தல்

செலவுத் தொகைகளை ஈடு செய்தல்

வங்கி அட்டைகள், சாரதி அனுமதிப் பத்திரம், தேசிய அடையாள அட்டை மற்றும் ஏனைய தனிப்பட்ட ஆவணங்கள் என்பவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான செலவுகளை ஈடு செய்தல்

ஏனைய செலவுகளை ஈடு செய்தல்

மருத்துவமனைக்குச் செல்வதற்கான வாடகை வாகன கட்டணம்/ அம்புலன்ஸ் கட்டணங்கள் என்பவற்றை ஈடு செய்தல்

திட்டவட்டமான 10 பாரதூரமான நோய்களுக்கெதிராக காப்புறுதி (அறுவை சிகிச்சைக்கு மட்டும்)
  • மாரடைப்பு (Myocardial Infarction)
  • தமனி அடைப்பை நீக்கும் சத்திர சிகிச்சை (Coronary Bypass Surgery)
  • முடக்குவாதம் (Cerebro Vascular Accident)
  • புற்றுநோய்
  • சிறுநீரகங்கள் செயலிழத்தல்
  • நுரையீரல், எலும்பு மஜ்ஜைகள் போன்ற முக்கிய உடல் உறுப்புக்களை மீளப் பொருத்துதல் (எவ்வாறிருப்பினும், இந்த அனுகூலம் அந்த உடல் உறுப்பை வழங்குபவருக்கு காப்புறுதியை வழங்கமாட்டாது)
  • பாரிசவாதம்
  • Multiple Sclerosis
  • நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (Primary Pulmonary Arterial Hypertension)
  • தீவிர கல்லீரல் வீக்கம் (Fulminate Hepatitis)

* காப்புறுதிப் பத்திரத்தின் காலப்பிரிவு ஆரம்பத்தின்/ உள்ளடக்கத்தின் 3 மாத காலப் பிரிவுக்குள் கடுமையான நோய்களுக்கான காப்புறுதித் திட்டம் செயற்படுத்தப்படும்.

தகைமை
  • கௌரவ காப்புறுதித் திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு 18 தொடக்கம் 65 வயது வரையிலான வயது வந்தவர்கள் தகைமை பெறுவார்கள்.
  • தொழில்வாண்மையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானது.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்