முழுமையான D + திட்டம்

முழுமையான D + திட்டம் என்றால் என்ன?

எமது அனைத்துமடங்கிய D+ திட்டம் நீரிழிவு நோயாளிகளுக்கான அனைத்துமடங்கிய ஆயுள் மற்றும் உடல்நலக் காப்புறுதியை வழங்குகின்றது. நீரிழிவு நோய்க்கு நாட்டின் மிகச் சிறந்த மருத்துவமனைகளை அணுகுவதற்கும், மிகச் சிறந்த சிகிச்சையைப் பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்குகின்றது. அது காப்புறுதிப் பத்திரதாரருக்கு மன ஆறுதலை வழங்குவதுடன், நிதி உதவியையும் உறுதிப்படுத்துகின்றது. அனைத்துமடங்கிய D+ காப்புறுதித் திட்டம் முன்னரேயே குறித்துரைக்கப்பட்டிருக்கும் உச்ச மட்டத் தொகை ஒன்றுக்கு அமைவாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான கட்டணப் பட்டியலில் செலவுகளை ஈடு செய்கின்றது.

இது தொடர்பாக மூன்று தீர்வுகள் இருந்து வருவதுடன், தமக்குத் தேவைப்படும் மருத்துவப் பராமரிப்பு மற்றும் நீரிழிவு நோயின் வகை என்பவற்றைப் பொருத்து காப்புறுதிப் பத்திரதாரர்கள் தமக்குத் தேவையான தீர்வைத் தெரிவு செய்து கொள்ள முடியும்.

வகை A:

இல.ரூ. 200,000 காப்புறுதி பாதுகாப்பு

வகை B:

இல.ரூ. 400,000 காப்புறுதி பாதுகாப்பு

வகை C:

இல.ரூ. 600,000 காப்புறுதி பாதுகாப்பு

 

*ஐந்து வருடத்தைப் பூர்த்தி செய்த பின்னர் காப்புறுதிப் பத்திரதாரரின் ஆரோக்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு, காப்புறுதிப் பாதுகாப்பை மேலும் நீடிக்க முடியுமா என்ற விடயத்தை முடிவு செய்யும் உரிமையை இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கொண்டுள்ளது

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
பரவலான விதத்தில் செலவுகளை ஈடு செய்வதற்கான வாய்ப்பு

தாதியர் சேவை செலவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவு செலவுகள், அறுவை சிகிச்சைக் கூட கட்டணங்கள், அறைக் கட்டணங்கள் மற்றும் அறுவை மருத்துவர், மயக்க மருந்து ஊட்டுனர், பொது மருத்துவர், மருத்துவ ஆலோசகர், விசேட மருத்துவர் ஆகியோருக்கான கட்டணங்கள் என்பவற்றை ஈடு செய்து கொள்வதற்கான காப்புறுதிப் பாதுகாப்பு

ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களுடன் இணைந்த விதத்தில் உடல்நலக் காப்புறுதிப் பாதுகாப்பு

திவி திலிண, மினி முத்து, மினி முத்து பரித்தியாக, பிறகுண, யசஇசுறு, ப்ரீடம், மினி முத்து தயாத மற்றும் ஜனதிறி ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களுடன் இணைந்த விதத்தில் இந்த உடல்நல பாதுகாப்பு காப்புறுதியினை பெற்றுக் கொள்ள முடியும்

உங்கள் வாழ்க்கைத் துணையையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கைத் துணையையும் சேர்த்துக் கொள்ளும் விதத்திலான நெகிழ்ச்சித் தன்மை. அந்த நிலையில் காப்புறுதிப் பத்திரதாரரும், வாழ்க்கைத் துணையும் 65 வயது வரையில் காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுக் கொள்வார்கள்

காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு

காப்புறுதிப் பத்திரத்தின் காலப் பிரிவு 5 வருடங்கள்

நெகிழ்ச்சித் தன்மை

பெருமளவுக்கு நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய தவணைக் கட்டண கொடுப்பனவு முறைகள் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்தம்)

காப்புறுதிப் பத்திரதாரருக்கு செலுத்தப்படும் அனுகூலத் தொகைகள்

முதலாவது வருடம் - காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படைத் தொகையில் ஆகக் கூடியது 50%

இரண்டாவது வருடம் - காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படைத் தொகையில் ஆகக் கூடியது 75%

மூன்றாவது வருடம் தொடக்கம் - காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் அடிப்படைத் தொகையின் உச்ச மட்ட 100%

பணம் சாரா அட்டை கொடுப்பனவு முறை

பணம் சாரா அட்டைக் கொடுப்பனவு முறை இந்தக் காப்புறுதித் திட்டத்துக்குப் பிரயோகிக்கப்படும்

தகைமை
  • இந்தக் காப்புறுதிப் பத்திரங்கள் 30 வயது தொடக்கம் 60 வயதுப் பிரிவைச் சேர்ந்த எவரும் கொள்வனவு செய்ய முடியும். அவை 65 வயது வரையில் செல்லுபடியாகும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்