Medi 60

Medi 60 என்றால் என்ன?

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் Medi 60 என்பது ஒரு சுகாதார காப்புறுதித் திட்டமாகும். இது நாட்டில் உள்ள மூத்த குடிமக்களின் (வயது 60) சுகாதார காப்பீட்டுத் தேவைகளை மிகவும் குறைந்த விலையில் வழங்குகின்றது. உங்கள் நிதி முதலீட்டின் அடிப்படையில் 3 திட்டங்களில் இருந்து உங்களுக்கு மிகவும் பொருத்தமான மருத்துவத் திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
நன்மைகள்
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நன்மைகள் - தனியார் மருத்துவமனைகள்
  • அறை கட்டணம் உட்பட்ட மருத்துவமனை மற்றும் பராமரிப்பு விடுதி (நர்சிங் ஹோம்) பராமரிப்பு கட்டணங்கள்
  • ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்கள் கட்டணம், அறுவைசிகிச்சை நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் கட்டணம்
  • மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை செலவுகள், சத்திர சிகிச்சைகூடத்தின் பயன்பாடு உட்பட பராமரிப்புக் கட்டணங்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்காக பரிந்துரைத்த ஆலோசக நிபுணருடைய விசாரணைகள் மற்றும் விஷேட சிகிச்சை
மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நன்மைகள் - அரச மருத்துவமனைகள்
  • அரச மருத்துவமனை ஒரு நாளுக்கான கொடுப்பனவு – ஆகக்கூடியது 15 நாட்கள் (அரச மருத்துவமனையில் சேர்க்கப்படும் கோவிட் 19 இக்காக அரச மருத்துவமனை கொடுப்பனவு வரையறைக்கு மேல் நாளொன்றுக்கு ரூ. 1,000/- (ஒரு இரவு ஒரு நாளாக கருதப்படும்)
  • அரச மருத்துவமனையின் பணம் செலுத்தாத விடுதியில் உள்நோயாளராக இருக்கும் போது கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் மற்றும் பரிசோதனை, ஸ்கேன் மற்றும் எக்ஸ் கதிர் ஆகியவற்றுக்கான செலவுகள் (அவற்றுக்கான பற்றுச்சீட்டுகளுக்கு உட்பட்டு)
ஒருநாள் அறுவை சிகிச்சை செலவுகள்

135 ஒருநாள் அறுவை சிகிச்சை செலவுகள் காப்புறுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலதிக நன்மைகள்

கண்புரை அறுவை சிகிச்சைகள் மற்றும் கோவிட்19 காரணமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சைகளுக்கும் பொருந்தும்;.

30 நாட்களில் உரிமைகோரல் பெற உரிமையுள்ளது.

காப்புறுதியை தொடங்கி 30 நாட்களில் இழப்பீடு பெற உரிமை உண்டு. விபத்துகளுக்கு இது பொருந்தாது.

முதலாம் ஆண்டு விதிவிலக்குகள்

சில குறிப்பிட்ட வியாதிகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் முதல் 12மாதங்களில் விலக்கப்படும்.

ஏற்கனவே இருக்கும் நிலைமைகள்

நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தம் தவிர, ஏறகனவே இருக்கும் மருத்துவ நிலைகள் விலக்கப்பட்டுள்ளன.

தகுதி

60 முதல் 70 வயது வரை உள்ள மூத்த குடிமக்களுக்கு காப்புறுதியின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள முடியும் மற்றும் 80 வயதில் நிறுத்தப்படும்.

என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்