ஏர்லி கேஷ் முன்கூட்டிய அனுகூலத் திட்டம்

ஏர்லி கேஷ் முன்கூட்டிய அனுகூலத் திட்டம் என்றால் என்ன?

முன்கூட்டிய வருமானத்திற்கான தேவையை நிவர்த்தி செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான ஆயுள் காப்புறுதி திட்டமாகும்.ஏர்லி கேஷ் திட்டம் உயர் கல்விக்கான நிதியை உருவாக்க, உங்கள் சொந்த வீடு, புத்தம் புதிய வாகனம் அல்லது உங்கள் கனவு திருமணத்திற்கு நிதியுதவி பெற விரும்புவோருக்கு சிறந்த திட்டமாகும். முன்கூட்டியே பணத்துடன், உங்கள் காப்புறுதிப் பத்திரம் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படைத் தொகையில் 50% வரையில் பெற்றுக் கொள்ள முடியும், அதே நேரத்தில் உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் ஒரு விரிவான பாதுகாப்புத் திட்டத்தின் பலன்களை தொடர்ந்து அனுபவிக்கலாம். காப்புறுதி செய்யப்பட்டிருக்கும் தொகை எந்த அளவுக்கு உயர்வானதாக இருந்து வருகிறதோ நீங்கள் பெறக்கூடிய முற்கொடுப்பனவுத் தொகை அந்த அளவுக்கு உயர்வானதாக இருந்து வரும்.

 

காலம்

(வருடங்கள்)

முதலாவது கட்டம்

(முதலாவது முற்கொடுப்பனவு)

இரண்டாவது கட்டம்

(இரண்டாவது முற்கொடுப்பனவு)

மூன்றாவது கட்டம்

(முதிர்ச்சி கொடுப்பனவு)

10

4ஆவது வருட இறுதியில் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையில் 20%

7ஆவது வருட இறுதியில்  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்  தொகையில் 30%

10ஆவது வருட இறுதியில் காப்புறுதி செய்யப்பட்ட  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையில் 30% + போனஸ் கொடுப்பனவு

15

5ஆவது வருட இறுதியில்  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்  தொகையில் 20%

10ஆவது வருட இறுதியில்  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்  தொகையில் 20%

15ஆவது வருட இறுதியில்  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையில் 60% + போனஸ் கொடுப்பனவு

 

20

10ஆவது வருட இறுதியில்  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்  தொகையில் 20%

15ஆவது வருட இறுதியில்  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும்  தொகையில் 20%

20ஆவது வருட இறுதியில்  உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையில் 60% + போனஸ் கொடுப்பனவு

 

மிகப் பெரிய, மிக வலுவான தேசிய காப்புறுதி நிறுவனத்திடமிருந்து அனைவருக்கும் காப்புறுதி
அனுகூலங்கள்
முதிர்ச்சியடைவதற்கு முன்னர் முற்கொடுப்பனவுகள்

முதிர்ச்சியடைவதற்கு முன்னர் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் அடிப்படைத் தொகையின் 50% வரையிலான 2 முற்கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளலாம். (10 வருட திட்டங்களுக்கு 50% மற்றும் 15 மற்றும் 20 வருட திட்டங்களுக்கு 40%)

கூட்டு போனஸ் கணிக்கப்படும் விதம்

முதிரச்சியின் போது கூட்டு போனஸ் தொகையுடன் செலுத்தப்படும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கும் தொகையின் மிகுதிக் கொடுப்பனவு அசல் காப்புறுதி தொகையின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது

மரணத்தின் போது வழங்கப்படும் நட்ட ஈடு

மரணத்தின் போது தங்கியிருப்பவர்களுக்கு வழங்கப்படும் நட்ட ஈடு உத்தரவாதப்படுத்தப்பட்ட மொத்தத் தொகை மற்றும் கூட்டு போனஸ் தொகை என்பவற்றைக் கொண்டதாக இருந்து வரும். இது தொடர்பாக செலுத்தப்பட்டிருக்கும் முற்பணத் தொகைகள் கவனத்திலெடுக்கப்படமாட்டாது

தவணைக் கட்டணத்தை செலுத்தும் முறைகள்

தவணைக் கட்டணக் கொடுப்பனவு தொடர்பான நெகிழ்ச்சித் தன்மையுடன் கூடிய தெரிவுகளுடன் (மாதாந்தம், காலாண்டுக்கொரு முறை, அரையாண்டுக்கொரு முறை அல்லது வருடாந்தம்) 10 வருடங்கள், 15 வருடங்கள் மற்றும் 20 வருடங்கள் வரையிலான காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்

மேலதிக பாதுகாப்புக்கள்

கடுமையான நோய்களுக்கான காப்புறுதி, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான காப்புறுதி, வாழ்க்கைத் துணைக்கான காப்புறுதி மற்றும் மேலும் உயரளவிலான பாதுகாப்பினைப் பெற்றுக் கொள்வதற்கென மேலதிகக் காப்புறுதி பாதுகாப்புக்களுடன் கூடிய விதத்தில் விரிவாக்கிக் கொள்ள முடியும்

நெகிழ்ச்சித்தன்மை

உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் சார்ந்திருக்கும் பிள்ளைகள் ஐந்து பேர் வரையிலும் மருத்துவமனை காப்புறுதி பயன்களுக்கென சேர்த்துக் கொள்ள முடியும்

தகைமை
  • யச இசுறு முன்கூட்டிய அனுகூலத் திட்டத்தில் சேர்ந்து கொள்வதற்கு 18 தொடக்கம் 60 வயது வரையிலான வயது வந்தவர்கள் தகுதியுடையவர்களாவார்கள்.
  • வாழ்க்கை குறித்த நீண்ட கால குறிக்கோள்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் இளம் தொழில்வாண்மையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.
என்னுடைய காப்புறுதி பங்காளராக நான் ஏன் ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸை தெரிவு செய்ய வேண்டும்?

ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.

மேலும் தெரிந்து கொள்ளவும்
துரித விசாரணை

மேலும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கென எம்மைத் தொடர்பு கொள்ளவும்

உடன் அழைப்பு : +94 11 235 7357

மிக அருகிலிருக்கும் கிளையைத் தெரிந்து கொள்ளுங்கள்

இப்பொழுது கண்டறிந்து கொள்ளுங்கள்

ஆண்டறிக்கையைத் தரவிறக்கம் செய்யவும்

இப்பொழுது தரவிறக்கம் செய்யவும்