எமது அடிப்படை தீ காப்புறுதி பத்திரம் உங்களுடைய வீட்டுக்கு காப்புறுதிப் பாதுகாப்பைப் பெற்றுத் தருகின்றது. அந்த வீடு பூர்த்தியடைந்ததாக இருந்து வந்தாலும் சரி, ஏற்கனவே வசிப்பதாக இருந்தாலும் சரி அல்லது நிர்மாணக் கட்டத்தில் இருந்து வந்தாலும் சரி தீ மற்றும் தீயுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு இடர்களிலிருந்து உங்களுக்கு காப்புறுதி பாதுகாப்பு கிடைக்கின்றது. தற்செயலாக ஏற்படும் தீ விபத்துக்கள் அல்லது அதனுடன் சம்பந்தப்பட்ட இடர்கள் என்பவற்றிலிருந்து வீட்டுக்கு ஏற்படக் கூடிய நிதிசார் இழப்புக்களை தடுத்துக் கொள்வதற்கான இயலுமையை இது வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்குகின்றது. மேலும், சேதமடைந்த வீட்டை பழைய நிலைக்கு எடுத்து வருதல் அல்லது மீளக் கட்டுதல் என்பவற்றை உடனடியாக மேற்கொள்வதற்கான உத்தரவாதத்தையும் அது வழங்குகின்றது.
விதிகள் மற்றும் நிபந்தனைகள்:
- கட்டடம் பிரத்தியேகமாக ஒரு தனியார் வதிவிடமாக/ வீடாக பயன்படுத்தப்படுதல் வேண்டும். ஏனைய நோக்கங்களுக்கு அல்லது வீட்டுக் கைத்தொழில்களுக்கு அது பயன்படுத்தப்படக் கூடாது.
- கட்டடம் நன்றாகப் பழுது பார்க்கப்பட்ட நிலையில் இருந்து வருதல் வேண்டும். (பூர்த்தி செய்யப்பட்டு ஆட்கள் வசிப்பதாக இருந்தால்)
- வீட்டின் கட்டமைப்பு அங்கீகரிக்கப்பட்ட தர நியமங்களுடன் கூடிய கட்டுமானப் பொருட்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டதாக இருந்து வருதல் வேண்டும்.
தீ காப்புறுதிப் பத்திரம் பின்வரும் விதத்திலான தீ மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட இடர்களுக்கெதிரான பாதுகாப்பைப் பெற்றுத் தருகின்றது.
- தீ மற்றும் மின்னல் தாக்குதல்
- கலவரங்கள் மற்றும் வேலை நிறுத்தங்கள்
- வேண்டுமென்றே சேதம் விளைவித்தல்
- திடீர் வெடிப்புக்கள்
- சூறாவளி/ கடுங் காற்று/ அதி வெப்பம் மற்றும் வெள்ளப் பெருக்கு
- பூகம்பங்கள்
- இயற்கை அனர்த்தங்கள்
- தாக்கம்
- மின்சாரத் தாக்கம்
- விமானங்களினால் ஏற்படுத்தப்படும் சேதம்
- நீர்த் தாங்கிகள் வெடித்தல் மற்றும் மிகை நீர் வெளியேற்றம்
- ஈட்டுத்தொகை கோரிக்கைகளை மிகவும் இலகுவான விதத்தில் மேற்கொண்டு கொடுப்பனவுகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வசதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
- காப்புறுதிப் பத்திரதாரர் குறிப்பிட்ட ஆதனத்தின் மீது காப்புறுதி பற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
- இலங்கையின் சட்டத் தொகுப்பின் பிரகாரம் காப்புறுதி பத்திரதாரர் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.
- காப்புறுதி செய்யப்படும் சொத்துக்கள்/ ஆதனங்கள் இலங்கையின் பூகோள எல்லைகளுக்குள் அமைந்திருத்தல் வேண்டும்.
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் 57 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்டிருக்கும் நாட்டின் முன்னோடி காப்புறுதிக் கம்பனியாகும். அரசின் பக்கபலம் அதன் வலிமையையும், நம்பகத்தன்மையையும் மேலும் ஊர்ஜிதம் செய்துள்ளது. அதே வேளையில், அக்கம்பனி விரிவான அனுபவத்துடன் கூடிய தொழில்நுட்ப அறிவுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அதன் ஆயுள் காப்பீட்டு நிதியம் 152.5 பில்லியன் இலங்கை ரூபாய் அளவை மிகைத்திருப்பதுடன், அதன் சொத்துக்கள் 268 பில்லியன் ரூபாய் அளவில் இருந்து வருகின்றன. நாட்டின் காப்புறுதிக் கைத்தொழிலில் இது ஓர் ஈடிணையற்ற சாதனையாகும்.